விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது : பிரேமலதா அதிரடி உத்தரவு

Premelatha Vijayakanth : விஜயகாந்த் படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
DMDK General Secretary Premalatha Vijayakanth warned that no party should use Vijayakanth's image
DMDK General Secretary Premalatha Vijayakanth warned that no party should use Vijayakanth's image
1 min read

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம் :

Premelatha Vijayakanth : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் ஏற்கனவே மக்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் இணைந்து இருக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் :

ஒவ்வொரு ஊருக்கும் சென்று பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விஜயகாந்த் குறித்த பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

விஜயகாந்த் படத்தை பயன்படுத்த கூடாது :

”விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறினார். கூட்டணிக்கு வந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால், சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் மாண்பை காக்க இந்த உத்தரவு :

” சில கட்சிகள் விஜயகாந்தின் புகைப்படத்தை அவர்களது பிரச்சாரங்களில் தவறாக பயன்படுத்தியதாக வந்த புகார்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக தொண்டர்கள் மத்தியில், இது கட்சியின் மரியாதை மற்றும் மறைந்த தலைவரின் மரபை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சினிமா துறையில் விஜயகாந்த் அவர்களின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது அவரது கலை பயணத்தின் ஒரு பகுதி. ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்துவது முற்றிலும் தவறு,” என்று பிரேமலதா தெரிவித்தார்.

தேமுதிகவிற்காகவே விஜயகாந்த் படங்கள் :

“விஜயகாந்த் அவர்களின் பெயரையும் புகைப்படத்தையும் தேமுதிகவின் கொள்கைகளை முன்னெடுக்கவே பயன்படுத்துவோம். மற்றவர்கள் இதை தவறாக பயன்படுத்தினால், சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் எதிர்க்கப்படுவார்கள்,” என்று பிரேமலதா எச்சரித்தார்.

மேலும் படிக்க : ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ : பிரேமலதா தேர்தல் சுற்றுப் பயணம்

தொண்டர்களுக்கும் கட்டுப்பாடு :

தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்தின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன், கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in