”ஜெயலலிதாவுடன் பிரேமலதா” : பரபரப்பை கிளப்பிய எல்.கே. சுதிஷ்

LK Sudhish Post on Premalatha vs Jayalalithaa : அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்கிறதா என்கிற பரபரப்பை கிளப்பும் வகையில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் எல்.கே. சுதிஷ்.
LK Sudhish Post on DMDK Leader Premalatha Vijayakanth vs Ex CM Jayalalithaa Photo
LK Sudhish Post on DMDK Leader Premalatha Vijayakanth vs Ex CM Jayalalithaa Photo
1 min read

யாருடன் கூட்டணி, தேமுதிக கப்சிப் :

LK Sudhish Post on Premalatha vs Jayalalithaa : அதிமுக, திமுக இரண்டையும் சம தூரத்தில் வைத்து பார்ப்பதாக, கூறி வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், யாருடன் கூட்டணி என்று சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுகவுடன் ஏற்பட்ட பிணக்கு இன்னும் நீடிக்கவே செய்கிறது. சட்டசபை தேர்தலை ஒட்டி ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் பிரேமலதா.

பிடி கொடுக்காத பிரேமலதா :

முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை(MK Stalin) அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் பிரேமலதா. இது திமுக கூட்டணிக்கான அச்சாரமா என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அரசியல் பேசவில்லை என்று யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரேமலதா.

கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு :

ஜனவரி மாதம் கடலூர் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணியை(DMDK Manadu Cuddalore) அறிவிப்பதாக கூறி வருகிறார் பிரேமலதா. கடந்த வாரம் திருப்பூரில் பிரசாரம் செய்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியை சந்தித்து பேசினார். இதன் காரணமாக அதிமுகவை நோக்கி தேமுதிக நகரத் தொடங்கி விட்டதா என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. இந்தநிலையில் தான் புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தேமுதிக பொருளாளர் சுதிஷ்.

ஜெயலலிதாவுடன் பிரேமலதா :

தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா விஜயகாந்த்(Premalath Vijayakanth) இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சுதிஷ், இருவரும் பிரசாரம் செய்யும் போது, மக்களை பார்த்து கையசைப்பது போல இந்தப் படம் அமைந்து இருக்கிறது. எனவே, அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வது உறுதியாகி விட்டதாக என்ற பரபரப்பு தமிழக அரசியலில் தொற்றிக் கொண்டுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in