

தேசிய முற்போக்கு திராவிட கழகம்
DMDK Alliance 2026 with DMK : விஜயகாந்தால் 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக). 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. அப்போது விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார்.
2011ல் எதிர்க்கட்சியாக தேமுதிக
இதையடுத்து 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தார். அதிமுகவை பகைத்து கொண்டதால் தேமுதிகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது.
தேமுதிக தொடர் தோல்வி
இதையடுத்து 2016ம் தேதி மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிக தோல்வி அடைந்தது. 2019, 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது.
இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிக
எனவே, இந்த முறை யாருடன் கூட்டணி அமைப்பார் பிரேமலதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான அறிவிப்பை பரபரப்பாகவே வைத்திருந்த தேமுதிக, ஒருவழியாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா, முறைப்படி கூட்டணியில் இணைந்தார்.
தேமுதிக வாக்கு வங்கி 0.4%
2006ம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலில், கணிசமான வாக்குகளை பெற்ற தேமுதிக, தற்போது 0.4% வாக்கு வங்கியுடன் நிற்கிறது. 15 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலை தான்.
2006 சட்டமன்றத் தேர்தல் (தனித்து போட்டி, 234 தொகுதிகள்) தேமுதிக வாக்கு வங்கி 8.38%. 2011 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 41 தொகுதிகள்): 7.88% வாக்குகள். 2016 சட்டமன்றத் தேர்தல் 2.39% வாக்குகள். 2021 சட்டமன்றத் தேர்தல் 0.43%.
கூட்டணிகளால் சில இடங்களில் வாக்குகள் அதிகரித்தாலும், தனித்து போட்டியிட்டால் தேமுதிகவின் வாக்கு வங்கி மிகக் குறைவாகவே இருக்கிறது.
சின்னம் ஒதுக்கப்படாத தேமுதிக
இந்த நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. முரசு சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம், தவெக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படாததால் தனி சின்னத்தில் போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உதய சூரியனில் போட்டியா?
தனி சின்னம் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக ஒப்புக் கொள்ளாது. எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால், தேமுதிகவினர் இதை ஏற்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. உதய சூரியனில் போட்டியிடவா, கட்சி நடத்துகிறோம் என்று அவர்கள் குரல் கொடுத்தால், அது பிரேமலதாவுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும்.
இருதலைக்கொள்ளி எறும்பாக தேமுதிக
முரசு சின்னத்தை பெற்று போட்டியிட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் தேமுதிகவிற்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தை நாடி, முரசு சின்னத்தை கேட்டுப்பெற தேமுதிக பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
=====