

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப்போட்டியை தேர்தல் களத்தை சந்திக்கின்றனர் தமிழக மக்கள்.
நாம் தமிழர் கட்சி
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி, தேர்தல் அறிக்கையே வெளியிட்டு பிரசாரத்தை முடுக்கி விட்டு இருக்கிறது. இவர்களின் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தேர்தல் அறிக்கை
அடுத்ததாக எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மகளிருக்கு ரூ.10,000 சிறப்பு தொகுப்பு, இலவச ஃபிரிட்ஜ் என அதிரடி காட்டியது.
திமுக தேர்தல் அறிக்கை
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன், மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 என 517 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது.
தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி
தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், படித்த இளைஞர்களுக்கு 29 வயதுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லை என்றால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 4000 ரூபாய், டிப்ளோ முடித்தவர்களுக்கு மாதம் 2500, மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 என வாக்குறுதி அளித்தது.
திமுக vs அதிமுக தேர்தல் அறிக்கைகள்
ஆளும் திமுக 517 வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், அதிமுக 297 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இரு கட்சிகளும் அளித்துள்ள வாக்குறுதிகளை ஒப்பீடாக பார்க்கலாம்...
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை வழங்கிய திமுக, எதிர்வரும் தேர்தலுக்கு 517 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதேபோல, அதிமுக, 297 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
இரண்டு கட்சிகள் வழங்கிய தேர்தல் அறிக்கைகளில் மகளிர் வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் கவனம் ஈர்த்துள்ளன. தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
* இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் - திமுக
* குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃபிரிட்ஜ் - அதிமுக
* மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 - திமுக
* மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 - அதிமுக
* முதியோர் உதவித்தொகை ரூ.2,000 ஆக அதிகரிப்பு - திமுக, அதிமுக
* மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 2,500 - திமுக
* மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.2,000 - அதிமுக
* 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் - திமுக
* அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் - அதிமுக
* 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் -திமுக
* வீடு இல்லாத குடும்பங்களுக்கு ’அம்மா இல்லம்’ திட்டத்தில் விலையில்லா வீடுகள் - அதிமுக எனவும்,
* மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 - திமுக, அதிமுக வாக்குறுதி
* நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ரூ. 3,500 - கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 - திமுக, அதிமுக வாக்குறுதி
* மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சம், காப்பீடு தொகை ரூ.10 லட்சம் - திமுக
* இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் - அதிமுக
* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை - திமுக, அதிமுக வாக்குறுதி
============