TN Assembly Election 2026 : 21 கட்சிகளுடன் திமுக கூட்டணி! : அதிமுக, தவெக, நாம் தமிழரை சமாளிக்க பிரமாண்ட வியூகம்

அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழரை முழு பலத்துடன் எதிர்கொள்ளும் வகையில், 2026 சட்டமன்ற தேர்தலை 21 கட்சிகளின் கூட்டணியுடன் சந்திக்கிறது திமுக.
DMK facing 2026 assembly election, alliance of 21 parties, confront ADMK alliance, TVk, Naam Tamilar
DMK facing 2026 assembly election, alliance of 21 parties, confront ADMK alliance, TVk, Naam Tamilar google
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து விட்டு, தொகுதி பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. தினகரன் வருகை எடப்பாடிக்கு வலு சேர்த்து இருக்கிறது. ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி, ஜி.கே. வாசன் உள்ளிட்டோரும் அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள்.

தவெக தனித்து போட்டி

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. விஜய் ஏற்கனவெ கூறியது போல 234 தொகுதிகளிலும் தவெக விசில் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

தனி வழியில் நாம் தமிழர்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தனித்தே களம் காண்கிறது. திருச்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான், காரைக்குடி தொகுதிகளில் களமிறங்கி உள்ளார்.

திமுக பிரமாண்ட கூட்டணி

அதிமுக, தவெகவை சமாளிக்க வேண்டிய கட்டாயம், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, திமுக பிரமாண்ட கூட்டணியை அமைத்து இருக்கிறது. திமுக கூட்டணி சிதறி விடும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அதை பொய்யாக்கி இருக்கிறார் ஸ்டாலின்.

கூட்டணியை கட்டமைத்த ஸ்டாலின்

திமுக கூட்டணி சிதறிவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் தொரட்ந்து சொல்லி வந்தனர். கடைசி வரை ஆட்டம் காட்டிய காங்கிரசையும் வழிக்கு கொண்டு வந்த திமுக, முதன்முறையாக தேமுதிகவையும் கூட்டணியில் சேர்த்து வட மாவட்டங்களில் வலுப்பெற்று இருக்கிறது.

4வது முறை ஒரே கூட்டணி

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி – சிந்தாமல் சிதறாமல், புதிய கட்சிகளையும் சேர்த்து 4ஆவது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை.

இந்த சாதனையை திமுக படைத்து இருக்கிறது. ஒருமுறை அமைக்கப்பட்ட கூட்டணி அடுத்த தேர்தல் வரை நீடிப்பது கிடையாது என்பதே இதுவரை வரலாறு. அதை உடைத்து காட்டி இருக்கிறார் ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சிக்கு 28+1

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் பங்கீடு நிறைவடைந்துள்ளது. சட்டசபை தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவடைந்து விட்டதால், திமுக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

மற்ற கட்சிகளுடன் விரைவில் பங்கீட்டை முடித்து விட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, சூறாவளி பிரசாரத்தை தொடங்க திமுக முடிவு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் 21 கட்சிகள் விவரம் :

1. திமுக

2. காங்கிரஸ்

3. மதிமுக

4. இந்திய கம்யூனிஸ்ட்

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

6. விடுதலை சிறுத்தைகள்

7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

8. தேமுதிக

9. மனிதநேய மக்கள் கட்சி

10. மக்கள் நீதி மய்யம்

11. தமிழக வாழ்வுரிமை கட்சி

12. மக்கள் விடுதலை கட்சி

13. ஆதித்தமிழர் பேரவை

14. அகில இந்திய பார்வர்டு பிளாக்

15. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

16. எஸ்டிபிஐ

17. மனிதநேய ஜனநாயகக் கட்சி

18. முக்குலத்தோர் புலிப்படை

19. கொங்கு இளைஞர் பேரவை

20. திராவிட வெற்றிக் கழகம்

21. புதிய திராவிட கழகம்

ராமதாஸ் - யாருடன் கூட்டணி?

ராமதாஸ் தலைமையிலான பாமக மட்டும் எந்தக் கூட்டணிக்கு செல்கிறது என்பது தெளிவாகவில்லை. 3 நாட்களில் முடிவை அறிவிப்பதாகவும், திராவிட கட்சியுடன் தான் கூட்டணி என்பது ராமதாஸ் நிலைப்பாடு.

அன்புமணி அதிமுக கூட்டணியில் இருப்பதால், திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை 22 ஆக உயரும்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in