திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மூன்று நாள் போலீஸ் கஸ்டடி : நீதிமன்றம் அனுமதி..!

100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி ...
Thevar Jayanthi Celebrations at Pasumpon: Vice President, Governor and Political Leaders Pay Tribute
Thevar Jayanthi Celebrations at Pasumpon: Vice President, Governor and Political Leaders Pay TributeAi Generated
1 min read

காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி :

திமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தொடர்பான 100 கோடி ரூபாய் மோசடி வழக்கு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

100 கோடி ரூபாய் மோசடி வழக்கு?

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அன்பில் மகேஷுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் :

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் இரண்டு நாட்கள் காவல் அனுமதி கேட்கும் போலீஸ் :

இதனை தொடர்ந்து அவரை விசாரிக்க மேலும் இரண்டு நாட்கள் அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுகிய போலீஸ் ,ஏற்கனவே அடுத்த மாதம் தேதி வரை வரை விசாரிக்க அனுமதி இருக்கின்ற நிலையில் போலீஸ், இவ்வாறு கேட்பது மேலும் அவருக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது .

இருப்பினும் போலீஸ் தரப்பில் இருந்து மனு கொடுத்திருக்க சூழலில் நீதிமன்றம் தரப்பிலிருந்து உத்தரவு எதுவும் வரவில்லை

====================