

விவசாயிகளுக்கு எதிரான திமுக
DMK Election Manifesto 2021 Not Fulfilled for Farmers in Tamil Nadu : கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று விட்டு சென்ற பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் சிலவற்றை சுட்டிக்காட்டி, விவசாயிகள் நலனில் திமுகவுக்கு அதிக அக்கறை இருப்பது போல காட்ட முயன்றார். களத்தில் உள்ள உண்மை நமக்கு வேறு கதையைச் சொல்கிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் சந்தித்து வரும் துன்பங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பட்ஜெட்டில் அறிவிப்புகளில் துரோகம்
2024-25 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால் கொடுத்து இருப்பதோ 15,000 இணைப்புகள் மட்டுமே. விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் போது, அவர்களுக்கு கைது மூலம் பதிலளிக்கிறது திமுக அரசு, குண்டர் சட்டத்தை கூட பயன்படுத்துகிறது.
விவசாயிகளுக்கு சிறு நீர்ப்பாசனத்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, ₹408.83 கோடியிலிருந்து ₹332.80 கோடியாகி விட்டது. அதாவது 18.5% குறைக்கப்பட்டு விட்டது, கூட்டுறவுத் துறைக்கான நிதி ₹4,872.68 கோடியிலிருந்து ₹3,561.73 கோடியாகக் குறைக்கப்பட்டது. உணவு சேமிப்பு நிதி ₹263.38 கோடியிலிருந்து ₹132 கோடியாகக் குறைக்கப்பட்டது. அதாவது 50 சதவீதம், இதுதான் திமுக அரசின் சாதனை.
பால் பண்ணையாளர்கள் வஞ்சிப்பு
பால் பண்ணையாளர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்ற திமுக அரசு ஆர்வம் காட்டவே இல்லை. தமிழகத்தில் மாம்பழம் கொள்முதல் விலை கிலோ 4 ரூபாயாக சரிந்தது. விளைபொருட்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த திமுக அரசோ வேடிக்கை பார்த்தது.
டெல்டா விவசாயிகள் ஏமாற்றம், குமுறல்
அரசின் மெத்தனம், குறைந்த அளவில் லாரிகள் இயக்கம், சாக்கு பைகள் பற்றாக்குறை நெல் கொள்முதலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த, மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தின. மேலும், திமுகவின் சுரண்டலால், நெல் மூட்டைக்கு ₹70 செலுத்த வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் தலையில் விடிந்தது. நெல் போக்குவரத்திலும் லாரிகள் ஒப்பந்தம் மூலம் நடைபெற்ற ஊழலால், 165 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அழுகிய பயிர்கள், முளைத்த நெல் மணிகள்
டெல்டாவில் பருவம் தவறிய மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த தங்கள் பயிர்கள் அழுகுவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் சிந்தினர். இழப்பீடாக ஹெக்டேருக்கு ₹35,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் கதறிய போதும், ஒரு அதிகாரி கூட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை, சேத மதிப்பீடும் நடைபெறவில்லை..
நிறைவேற்றப்படாத திமுக தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கலாம் :
வாக்குறுதி எண் 36: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மைத் துறையில் ஒரு பிரத்யேகப் பிரிவை உருவாக்குவோம்.
வாக்குறுதி எண் 39: கொடைக்கானலில் 390 ஏக்கரில் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
வாக்குறுதி எண் 41: சொட்டு நீர் பாசன முறைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 90% மானியம்
வாக்குறுதி எண் 50: ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு வசதிகள் நிறுவப்படும்
வாக்குறுதி எண் 80: ஈரோட்டில் ஒரு பண்ணை இயந்திர உற்பத்தி அலகு
வாக்குறுதி எண் 89: முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏரிகள் மற்றும் குளங்களைப் பாதுகாப்பதற்கான ₹10,000 கோடி சிறப்புத் திட்டம்.
விவசாயிகள் ஏமாற மாட்டார்கள்
நானும் டெல்டாக்காரன் தான் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்,
விவசாயிகளின் வாழ்க்கை, நலனை மேம்படுத்த எதையும் செய்யவில்லை.
விவசாயிகளின் மீட்பராக தன்னைக் காட்டிக் கொள்ள அவர் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் விவசாய சமூகம் அதை எப்போதும் நம்பாது.
=======================