

உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு
முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எதிராகவும், கரூர் விவகாரம் குறித்து அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரை சரமாரியாக கேள்வி எழுப்பி, வழக்கை வாபஸ் பெற வைத்து இருக்கிறது.
தவெகவிற்கு எதிராக திமுகவுக்கு பின்னடைவு
இது சட்ட ரீதியிலான விஷயங்களில் தவெகவுக்கு எதிராக திமுகவுக்கு முதல் பின்னடைவாகும். திமுகவின் லீகல் டீம் ரொம்ப பெருசு. சட்ட ரீதியாக போராடுவதில் திமுக கில்லாடி.
இரண்டு வழக்குகளில் வெற்றி
தவெகவுக்கு எதிரான வழக்குகள் என்று எடுத்துக்கொண்டால், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கிலும் திமுகவின் ஜென் Z தலைவர்கள் கைது வழக்கிலும் திமுக சரியான வாதங்களை முன்வைத்து வெற்றி பெற்றிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு
இந்த தொடர் வெற்றிக்கு நடுவே உச்சநீதிமன்றத்தில் தற்போது திமுக தரப்பு சந்தித்திருக்கும் பின்னடைவு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விஷயங்களில் தெளிவாக இருக்கும் திமுக எப்படி இந்த விஷயத்தில் சொதப்பியது? மனுவில் என்ன தவறு இருந்தது?
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி நேரில் சந்திக்கிறார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை வழங்குகிறார். ஆனால், கரூர் நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது.
இந்த நேரத்தில் முதல்வர் நேரில் செல்வதும், அது குறித்து பேசுவதும் வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்று திமுக மனுவில் திமுக தெரிவித்து இருந்தது.
முதல்வர் பேச்சை நீதிமன்றம் கட்டுப்படுத முடியுமா?
இதை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், திமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கருதால் கொதிப்படைந்தனர். நீதிபதி விஸ்வநாதன், "என்ன நினைக்கிறீங்க நீங்க? முதல்வர் பேச்சையும், செய்திகளையும் உச்சநீதிமன்றம்தான் கட்டுப்படுத்த வேண்டுமா? பேச்சுரிமைக்கு தடை கேட்கிறீங்களா?
தவறான வாதத்தால் திமுகவிற்கு சிக்கல்
அரசியல் எதிரிகளின் கருத்துக்கு எப்படி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தவறான வாதத்தால் சிக்கலே தொடங்கியது. முதல்வர் கரூர் சம்பவம் குறித்து பேசக்கூடாது என்று திமுக நீதிமன்றத்தை அணுகியது தவறு என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவது தவறு, முதல்வர் விஜய் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அரசு பணி ஆணைகளை வழங்க கூடாது என்று கேட்டதுதான். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலையை வழங்க முதலமைச்சர் கரூர் போகிறார். அவரது பெயர் எஃப்ஐஆரில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.
மனுவை திரும்பப் பெற்ற திமுக
இது எப்படி வழக்கின் விசாரணையை பாதிக்கும்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. முதல் பின்னடைவு இதையடுத்து இந்த வழக்கை திரும்ப பெற திமுக முன்வந்தது.
==================