”ஆட்சியில் பங்கு” தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது : முதல்வர் பதிலடி

‘ஆட்சியில் பங்கு’ என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது, இது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DMK leader Stalin has categorically stated that 'participation in governance' is not suitable for Tamil Nadu, we know this and the Congress knows it too.
DMK leader Stalin has categorically stated that 'participation in governance' is not suitable for Tamil Nadu, we know this and the Congress knows it too.google
2 min read

ஆட்சியில் பங்கு

காங்கிரஸ் DMK leader Stalin has categorically stated that 'participation in governance' is not suitable for Tamil Nadu, we know this and the Congress knows it too : தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்ற டிமாண்ட் காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒலித்து வருகிறது. இதுபற்றி, அமைச்சர் சிலர் விமர்சித்தாலும், கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க திமுக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் காங்கிரஸ் சென்றால், அது திமுகவை தேர்தலில் பதம் பார்க்கும். குறிப்பாக சிறுபான்மையின வாக்குகள் பிரியும். மதச்சார்பற்ற கூட்டணி என்ற திமுகவின் பிம்பம் உடைந்து, தவெக பலம் பெறும்.

42 தொகுதிகள், ஆட்சியில் பங்கு

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் புதிய மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, 42 தொகுதிகள் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, விரைவில் குழு அமைக்கப்படும், 22ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று திமுக அறிவித்து இருக்கிறது.

இந்தநிலையில், சென்னையில் INDIA TODAY நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்...

* சட்டமன்ற தேர்தலை திமுக- காங்கிரஸ் இணைந்துதான் சந்திக்கும்.

* ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.

* ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை.

* அது எங்களை விட அவர்களுக்கு ( காங்கிரஸ் ) நன்றாகவே தெரியும்.

* நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதியே இந்தக் கோஷம்.

* தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்

* திமுக கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என சிலர் சதி செய்கிறார்கள்.

* இதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை, அவர்களும் ( காங்கிரஸ் ) கவலைப்படவில்லை

* திமுக கூட்டணியில் முறிவு ஏற்படுத்தவே சிலர் “ஆட்சியில் பங்கு” என கிளப்பி விடுகின்றனர்.

* 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்கிற பேச்சு, மக்களை குழப்ப எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பேச்சு

* 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களைப் பெறும்.

* பாஜகவின் வெறுப்பு அரசியலுக்குத் துணையாக இருப்பது அடிமைகள் மற்றும் அவதூறுகள்.

* இந்தியா டூடே கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 40% ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.

* திமுகவிற்கும் அடுத்து இருக்க கூடிய கட்சிக்கும் வித்தியாசம் 12 சதவீதம்.

* இது Simple Arithmetic தான். வெறும் 3 சதவீதம் இருந்தாலே Clean Sweep.

*12 சதவீதம் என்றால் நிச்சயம் ‘THUMPING VICTORY’ தான்

காங்கிரசுக்கு முதல்வர் பதிலடி

என்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், காங்கிரசின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வரும் காங்கிரசார் ஆட்சியில் பங்கு குறித்து பேச முடியாது. அப்படி வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதே இருக்கும்.

ராகுல் கையில் இறுதி முடிவு

எனவே, இறுதி முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் பக்கம் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. எனவே, ராகுல் காந்தி எடுக்கப் போகும் முடிவே திமுகவா அல்லது தவெகவுடன் கூட்டணியா என்பதை இறுதி செய்யும்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in