

காவல்துறை மானிய கோரிக்கைக்கு முதல்வர் விஜய் :
காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்து பேசினார்.
திமுக -வினர் வெளிநடப்பு :
பேரவை ஆரம்பித்தது முதலே திமுகவினர் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முதல்வர் பேச பேச, திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
முதல்வரின் பதிலுரைக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர்.
ஆனால் சபாநாயகர், நான் அனுமதி தருவதாக இல்லை. இந்த பதிலுரைக்கு பின் வனத்துறைக்கு அனுமதி வழங்கிவிட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினார்.
இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் இருக்கை முற்றுகை :
திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்ததால் திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் 18 நாள்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
முதல்வர் விஜய் பதில் :
இன்று அதற்கான பதிலுரையை முதல்வர் விஜய் பேரவையில் ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் விஜய், திமுகவினரின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களைப் பட்டியலிட்டார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலைப் பார்த்துச் சிரித்தவாறே முதல்வர் விஜய் தனது பதிலுரையை முடித்த நிலையில், திமுக தரப்பில் பேச வாய்ப்பு கோரப்பட்டது.
அமளியில் ஈடுபட்ட திமுக -வினர் :
திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “உங்கள் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற இடம் இது அல்ல; நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லை, அனுமதிக்க முடியாது.
முதல்வர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், இப்போது உங்களை பேச அனுமதித்திருப்பேன்.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், நேரலையிலும் சென்று கொண்டிருக்கிறது.
யார் யார் எப்படி என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
============