“TVK ஆட்சி அமைக்க விடுங்கள்“ : மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் : திமுக எம்பி கனிமொழி திடீர் ஆதரவு!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க வழி விட வேண்டும் என்று, திமுக எம்பி கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
DMK MP Kanimozhi has requested that TVK allowed to form a government in Tamil Nadu.
DMK MP Kanimozhi has requested that TVK allowed to form a government in Tamil Nadu.google
1 min read

தகிக்கும் தமிழக அரசியல்

அடுத்து யார் ஆட்சி? தமிழக அரசியல் களம் தகிக்கிறது. தவெகவிற்கு ஆட்சி அமைக்க இன்னும் 6 இடங்கள் இருந்தால் போதும். ஆதரவு தருவதில் கம்யூனிஸ்டுகள், விசிக போக்கு காட்டுகின்றன.

இன்னொரு பக்கம், திமுகவும், அதிமுகவும் தொடர் ஆலோசனை நடத்தி வருவது, இருவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறார்களா என்ற சந்தேகத்தை வலுக்க செய்கிறது.

கொளுத்தி போட்ட ஆளுநர்

இரண்டு திராவிட கட்சிகளும் இணைந்து வந்தால், பதவிப் பிரமாணம் செய்து வைக்க தயார் என்று கொளுத்தி போட்டு இருக்கிறார் ஆளுநர் அர்லேகர். இதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது தான் அது. இதை மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஜனாதிபதி ஆட்சி?

10ம் தேதிக்குள் முடிவு எதுவும் எடுக்கப்படா விட்டால், ஜனாதிபதி ஆட்சி வரும். 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை தேர்தல், இதை எதிர்கொள்ளும் தைரியம் கட்சிகளுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

மக்களின் கோபமும் யாரை சாய்க்கும் என்று சொல்ல முடியாது.

தவெக ஆட்சி - கனிமொழி ஆதரவு

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “ தவெக ஆட்சி அமைக்க வழி விட வேண்டும். மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்காவிட்டாலும், அவர்களின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.

வதந்திகளுக்கு பதில் கிடையாது

திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தி, இதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.

ஆளுநரே தேவையில்லை

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆளுநர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆளுநரே தேவையில்லை என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு” என்று கனிமொழி கூறினார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in