அரசு விழாவில் ’திமுக MP, MLA மோதல்’ : ஒருமையில் திட்டி ஆவேசம்

DMK MP vs DMK MLA Clash : ஆண்டிப்பட்டி அரசு விழாவில் திமுக எம்பியும், எம்எல்ஏவும் ஒருவருக்கு ஒருவர் ஒருமையில் திட்டிக் கொண்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
DMK MP vs DMK MLA Clash  in TN Government Function in Andipatti
DMK MP vs DMK MLA Clash in TN Government Function in Andipatti
1 min read

நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் :

DMK MP vs DMK MLA Clash : தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்(Nalam Kakkum Stalin Scheme) விழா நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் தலைமை வகிக்க, திமுகவைச் சேர்ந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி, பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக எம்பியை தடுத்து திமுக எம்எல்ஏ :

நிகழ்ச்சியில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தின் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.இதனை எம்பி. தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டார். அந்த ஆணையினை அவர் கையில் இருந்து ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பறித்து, “இது நான் வாங்கிக் கொடுத்தது, நான்தான் கொடுப்பேன்,” எனக் கூறி பயனாளிக்கு கொடுத்தார்.

எம்பி, எம்எல்ஏ மோதல், வாக்குவாதம் :

இதனால் கோபம் அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து ஒருமையில் திட்டத் தொடங்கினார். இதைக்கேட்ட எம்எல்ஏ.மகராஜனும் பதிலுக்கு ஒருமையில் காரசாரமாக பேச, விழா மேடை களேபரமானது. இருவரின் வாக்குவதாமும் ஒலிபெருக்கி மூலம் மூலம் கேட்டதால், விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவசரமாக முடிக்கப்பட்ட நிகழ்ச்சி :

ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் இருவரும் உரத்த குரலில் சண்டையிட்டனர். வரவேற்பு பேனரில் தனது படம் ஏன் வைக்கப்படவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசத்துடன் கத்தினார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மைக்கை வாங்கி அவசர அவசரமாக நன்றி உரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைக்க கூறினார்.

அவசரமாக கிளம்பிய எம்பி, எம்எல்ஏ :

இதனைத்தொடர்ந்து நன்றி கூறப்பட்டு நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனும், மகாராஜனும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.

மேலும் படிக்க : அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு : எடப்பாடி மனு தள்ளுபடி

அரசு விழா மேடையில் ஆளும் கட்சி எம்பியும், எம்எல்ஏவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு, ஒருமையில் திட்டிக் கொண்டது விழாவிற்கு வந்திருந்தவர்களை முகம் சுளிக்கச் செய்தது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in