”பரந்தூர் விமான நிலையம்” : வளர்ச்சி திட்டங்களில் அரசியல் வேண்டாம் : தவெக அரசின் முடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு...!

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிடும் முடிவை தவெக அரசு திரும்ப பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.
DMK urged TVK government to withdraw its decision to abandon  Parandur airport project
DMK urged TVK government to withdraw its decision to abandon Parandur airport projectAI generated
1 min read

கைவிடப்படும் பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமானநிலைய திட்டம் கைவிடப்படும் என் முதல்வர் விஜய் சட்டப் பேரவையில் அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து பேச பேரவையில் அனுமதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சபாநாயகர் 110 விதியின் கீழ் அறிவித்துவிட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவோ, விவாதிக்கவோ அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

இதனை தொடர்ந்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ”பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்க சில நாட்களாக கோரிக்கை வைத்து வந்தோம்.

விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை

ஆனால் அனுமதிக்கிறோம், அனுமதிக்கிறோம் என்றே சொல்லி வந்து திடீரென இன்று 110 விதியின் கீழ் அந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து, அதன் மீது விவாதம் கிடையாது என்று சொல்லுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கலாமா?

எதிர்கட்சியினரின் குரலை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவதை முடக்குகிறது இந்த அரசு.

பரந்தூர் விமான நிலையம் அவசியம்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. ஒரு விமான நிலையம் என்பது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.

பொருளாதார வளர்ச்சியை யோசியுங்க

ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விமான நிலையம் இருக்கும். தேசியளவில் 3-ஆம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் இடத்துக்கு பின்தங்கிவிட்டது. சென்னையை விஞ்சி பெங்களூரு விமான நிலையம் தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறி விட்டது.

பரந்தூர் தேர்வு ஏன்? திமுக விளக்கம்

பரந்தூரில் விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்போடு தான், ஸ்ரீபெரும்புதூருக்கு மின்னணு நிறுவனங்கள் வந்து இருக்கின்றன. அந்தப் பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால், பரந்தூர் விமான நிலையம் அவசியமாகிறது.

பல இடங்களை பரிசீலித்த பிறகு தான் முந்தை திமுக அரசு பரந்தூரை தேர்வு செய்தது.

அரசியலுக்காக கைவிடக் கூடாது

எனவே, பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தால், தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக ஒரு திட்டத்தை கைவிடக் கூடாது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக, சென்னைக்கு 2வது விமான நிலையம் மிகவும் அவசியம்’ என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in