தொகுதி பங்கீடு தொடர் பேச்சுவார்த்தை
DMK VCK Alliance Seat Sharing 2026 : வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ம் தேதி முதல் நடந்து வரும் நிலையில் , விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதியை கேட்டு வந்ததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
தொடர் பேச்சு வார்த்தைக்கு பிறகு , விசிகவிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்தானது
சட்டமன்ற தேர்தல் விசிக விற்கு 8 தொகுதிகள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 2 பொதுத்தொகுதியிலும் ,மீதமுள்ள 6 தொகுதியில் தனித்து களம் காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
திமுக கூட்டணி கட்சிகள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை தொகுதிப் பங்கீடு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
அதன்படி திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ்க்கு 28 தொகுதிகள் , விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொமதேக 2 தொகுதிகள் என திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கிட்டு நிறைவடைந்துள்ளது .
மேலும் படிக்க : புதுச்சேரியில் 3 தொகுதியில் விசிக தனித்து போட்டி : தொகுதியில் ஒதுக்கீட்டில் திருப்தி இல்லை : திருமாவளவன்
குறிப்பாக நாளை தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிகிறது
தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் கருத்து
“கட்சி நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டணி நலனும் முக்கியமானது. இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும். வலதுசாரி சக்திகள் காலூன்றக் கூடாது. அதனால் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனநிறைவே,” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.