
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதை குறிப்பிட்டார்.
பட்டம் பதவிகளை எதிர்பார்க்காமல் உழைக்கும் இயக்கம் தான் மதிமுக எனத் தெரிவித்த துரை வைகோ, ஏழு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்வதை சுட்டிக் காட்டினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட தாங்களும் விரும்புவதாக கூறிய அவர், குறைந்தது 12 சீட்களை திமுகவிடம் கேட்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அதிக இடங்களில் போட்டியிட்டால் தான் கட்சியின் அங்கீகாரம்,சின்னத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார்.
சுயமரியாதையை மதிமுக என்றும் விட்டுக் கொடுத்து செல்லாது என்றும் துரை வைகோ திட்டவட்டமாக கூறினார்.
கூட்டணி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்து வருவது, அரசியல் தந்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
====