மின் கட்டணம் செலுத்தும் முறை
தமிழகத்தில் தற்போது உள்ள முறைப்படி வீடுகளுக்கான மின் பயன்பாடு, ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது .
அவ்வாறு கணக்கெடுக்கும் நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிர்ணயம் இருக்கிறது .
இந்த காலக்கெடு கடந்தால் எவ்வித அறிவிப்புமின்றி மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்படும். பின்னர், அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பின் மட்டுமே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்ற முறையே நிலவி வந்தது
ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறை
இந்த நிலையில் இவ்வாறான சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் ஆன்லைனில் எளிதாக மின் கட்டணம் செலுத்தும் முறையானது கொண்டுவரப்பட்டது
இதை எவ்வாறு பயன்படுத்துவது
இந்த ஆன்லனில் கட்டண வசதியை பெற , மின் வாரியத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான 'www.tnpdcl.org' என்ற இணையதளத்திற்கு சென்று, 'பேமென்ட்' பகுதியில் உள்ள 'EB Auto Pay' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் மின் இணைப்பு எண்ணை உள்ளீடு செய்து, விவரங்களை சரிபார்த்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது
வங்கி கணக்கு தகவல்களை உள்ளிட வேண்டும்
அதன்பின், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10 ஆவது நாளில், நுகர்வோரின் மின்கட்டணத்தொகை அவர்களது வங்கி கணக்கில் இருந்துதானாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு முறையும் நாம் உள்ளே சென்று எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய தேவையில்லை
இது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது
இது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதுபடி ,வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்தப் பிரிவில் (Low Tension) உள்ள அனைத்து மின்நுகர்வோரும் இந்த எளிய நவீனவசதியைப் பயன்படுத்திப் பலன் பெறலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
=========================