EPS : என் கையில்தான் இறுதி முடிவு’ : உறுதியுடன் நிற்கும் எடப்பாடி

Edappadi Palanisamy on Amit Shah : எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா சொன்னார், கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ADMK Chief Edappadi Palanisamy on Amit Shah Statement
ADMK Chief Edappadi Palanisamy on Amit Shah Statement
1 min read

கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? ’ :

Edappadi Palanisamy on Amit Shah : தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதில் பாஜகவும் இடம்பெறும் என்று அமித் ஷா தெரிவித்து இருந்தார். அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆவார் என்றும், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் ஒற்றை ஆட்சிதான். நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விளக்கம் கொடுத்தார்.

அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றி :

இந்தநிலையில், சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy), சட்​டப் ​பேர​வைத் தேர்​தலில் பாஜக - அ​தி​முக​வின் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பெற்று ஆட்​சி​யமைக்​கும்.

மேலும் படிக்க : 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

கூட்டணி ஆட்சி - அமித் ஷா சொல்லவில்லை :

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி(Alliance Govt) என்று அமித் ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது” அமித் ஷா(Amit Shah) பேசியதை திரித்துக் கூறக்கூடாது. எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் வர இருக்கின்றன.

அதிமுக கூட்டணி - திமுகவுக்கு பயம் :

”அதிமுக கூட்டணியை(ADMK BJP Alliance) பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அன்புமணி கூறியதாக நீங்கள் கேட்கிறீர்கள். கூட்டணிக்கு பாமக வரட்டும் அப்போது பார்க்கலாம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in