”கூடுதலாக 20 எம்பி இடங்கள், பறிகொடுத்த தமிழகம்” : தொலைநோக்கற்ற முதல்வர், பறிபோன பொன்னான வாய்ப்பு : எடப்பாடி கண்டனம்!

முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கற்ற எதிர்ப்பால், தமிழகத்திற்கு 20 எம்பி இடங்களை பறிபோய் இருப்பதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
Edappadi Palaniswami alleged that Tamil Nadu, lost 20 MP seats due to CM Stalin's short-sighted opposition
Edappadi Palaniswami alleged that Tamil Nadu, lost 20 MP seats due to CM Stalin's short-sighted oppositiongoogle
1 min read

மகளிர் மசோதா தோல்வி

Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் தோல்வியில் முடிந்தது. இதை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

1998ல் கொண்டு வரப்பட்ட மசோதா

இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ” 1998ல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது.

வாய்ப்பு போய் விட்டது

தமிழகம் தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைப் பெறுவதற்கும் கிடைத்த வாய்ப்பு இது.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொலைநோக்கற்ற பார்வையால் தமிழகம் அதை இழந்து விட்டது.

பிரதமரால் பொன்னான வாய்ப்பு

"நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 20 எம்.பி. இடங்கள் (சுமார் 50% உயர்வு) கிடைக்கக்கூடிய பொன்னான வாய்ப்பைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

கண்மூடித்தனமாக எதிர்த்த தமிழகம்

ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்மூடித்தனமாக அதனை எதிர்த்தார். தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைச் சிதைக்கும் வேலையை அவர் செய்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தால், தமிழ்நாட்டுக்கு 9 தொகுதிகள் கிடைக்காமல் இருந்திருக்கும்.

2026ன் படி நடந்தால் பெரிய பாதிப்பு

ஆனால், முதலமைச்சரின் தொடர் எதிர்ப்பால், இனி வரும் காலங்களில் 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மறுவரையறை நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

இதன் விளைவாக, தமிழகம் தனது நாடாளுமன்ற இடங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவில் இழக்க நேரிடும்.

பெண்களுக்கு பெரிய அநீதி

'இந்தியா' கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து திமுக எதிர்ப்பது பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை இழைத்து இருப்பதாக” எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in