அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பொறுப்பு : எடப்பாடி பழனிசாமி! : துணை பொதுச்செயலாளர் SPV..

தலைமை நிலை​யச் செய​லா​ள​ராக இருந்த எஸ்​.பி.வேலுமணிக்கு துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. நத்​தம் விஸ்​வ​நாதனுக்கு மீண்​டும் துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.
Edappadi Palaniswami assigns responsibilities again to ministers who had left the AIADMK.
Edappadi Palaniswami assigns responsibilities again to ministers who had left the AIADMK. google
1 min read

அதிமுகவிற்குள் ஏற்ப்பட்ட கட்சி பிளவு

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 47 இடங்​களில் வென்​றது. விசிக , கம்யூனிஸ்ட கட்சிகள் ஆதரவு கொடுக்க தவெக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது

தவெக அதரவு வழங்கிய அதிமுக எம்​எல்​ஏக்​கள்

சட்டபேரவையில் அதிமுக பொதுசெயலாளர் பழனி​சாமி​யின் உத்தரவை மீறி , அதி​முக எம்​எல்​ஏக்​கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.இது அதிமுகவினரிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது

பதவவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு

தவெகவிற்கு ஆதரவு வழங்கிய எம்​எல்​ஏக்​களின் பதவி​ பொறுப்புகளிலிருந்து நீக்கு அதரடியாக செய்பட்டார் மேலும் அவரகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவைத்தலைவரிடம் மனு அளித்திருந்தார்

மீண்டும் பதவி வழங்கிய எடப்பாடி

தலைமை நிலை​யச் செய​லா​ள​ராக இருந்த எஸ்​.பி.வேலுமணிக்கு துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. நத்​தம் விஸ்​வ​நாதனுக்கு மீண்​டும் துணை பொதுச்​செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

தலைமை நிலை​யச் செய​லா​ள​ராக முன்​னாள் அமைச்​சர் வரகூர் அ.அருணாசலம் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். முன்​னாள் அமைச்​சர்​கள் பி.தங்​கமணி, கே.சி.கருப்​பணன், எஸ்​.பி.சண்​முக​நாதன், கே.பி.அன்​பழகன்,

ஆர்​.​காம​ராஜ், கே.சி.வீரமணி, பி.​பால​கிருஷ்ண ரெட்​டி, மாஃபா பாண்​டிய​ராஜன், திருத்​தணி கோ.அரி எம்​எல்ஏ உள்​ளிட்​டோருக்கு அமைப்​புச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள்

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினமா செய்தது அத்தொகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ,

பாஜாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை , உங்களை வெற்றி பெற செய்த் மக்களுக்கு நீங்கள் நன்றி கூறியே ஆக வேண்டும் , இது முற்றிலும் தவறான செயல்பாடு என்று விமர்சனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்கள்

தங்களின் பதவியை ராஜினாம செய்தஅதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் , பேரவை தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி தவெகவில் இணைந்தனர்

சி. விஜயபாஸ்கர் ராஜினாமா

அதிமுகவில் சிவி சண்முகத்திற்கு ஆதர்வாக இருந்த விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். 29ம் தேதி தவெகவில் இணைகிறார்.

விராலிமலை புதிய நிர்வாகிகள் நியமிப்பு

புதுக்​கோட்டை வடக்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்த முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர், தனது ஆதர​வாளர்​களு​டன் தவெக​வில் இணைய உள்ள நிலை​யில், அம்​மாவட்​டத்​தில் பெரும்​பாலான கட்சி பதவி​களுக்கு புதிய நிர்​வாகி​கள்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்​.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in