

செங்கோட்டையன் திமிர் பிடித்தவர்
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தவெக வேட்பாளருமான செங்கோட்டையன் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ”இங்கே இருக்கிற எம்.எல்.ஏ மாதிரி திமிர் பிடிச்ச ஆள் இல்லை. உங்களையெல்லாம் அடிமையா வச்சிருந்தார்
அதிமுகவால் எம்எல்ஏ ஆனவர்
இனிமேல் சுதந்திர காற்றை வாங்குவீர்கள். செங்கோட்டையனைப் பற்றி பேசியே ஆகணும். இதுவரைக்கும் பேசாமல் இருந்தேன். அவரு தானா எம்எல்ஏ ஆகல. இங்க இருக்கின்ற அதிமுக நிர்வாகிகள் இரவென்றும் பகலென்றும் பாராமல் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உங்க உழைப்பால் அவர் எம்எல்ஏ ஆனார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்
சுயநலம், சுயநலம், திமிர், அகங்காரம். அதனால அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டிய சூழல் வந்துச்சு. கட்சிக்கு கட்டுப்பாடு தேவையா இல்லையா?
கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் வெளியேற்றுவது என்பதை தொடர்ந்து அண்ணா திமுக கடைபிடித்தது. அதைத்தானே கடைபிடிச்சோம்..
குடும்பத்தினரே புகார் கொடுத்தனர்
இவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தபோது இவருடைய மனைவி, செங்கோட்டையனுடைய மனைவி, செங்கோட்டையனுடைய மகன் தலைமைச் செயலகம், வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தாங்க.
அது கேவலமான புகார். நான் வந்து இந்த பதவியில இருக்கிறதுனால அதைச் சொல்லல. அது என்ன குற்றச்சாட்டுன்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும். இங்க இருக்கிற கோபிசெட்டிபாளையத்தில இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும்.
பதவியை பறித்தார் ஜெயலலிதா
செங்கோட்டையன் மனைவியும் மகனும் ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு படிக்கட்டுல இருந்து கீழே இறங்குறதுக்குள்ள பதவி போயிடுச்சு. பதவிய உருவிட்டு விட்டாங்க ஜெயலலிதா.. ஜெயலலிதாவுக்கு விசுவாசமா இருந்தா பதவிய எடுப்பாங்களா?
அமைச்சரவையில் சேர்த்தது தவறு
நான் முதலமைச்சர் ஆகி என்னுடைய அமைச்சரவையில சேர்த்ததுதான் நான் செஞ்ச தப்பு. இல்லையென்றால் வீதியில போனா கை எடுத்து கும்பிடுறதுக்கு யோக்கியதை இருக்குதா அந்த ஆளுக்கு?
என்னுடைய அமைச்சரவையில, கெஞ்சி கண்ணீர் விட்டார் மனுஷன். இப்பெல்லாம் எதேதோ பேசுறார்
அருகதை இல்லாதவர்
நீ எங்க ஜெயலலிதாவை மதிச்ச? இங்க பாருங்க, பள்ளிக்கூடத்துல போய் சைக்கிள் குடுக்கிறார். யார் படம்? கலைஞர் படம், ஸ்டாலின் படம்! யோக்கியதை எப்படின்னு பாரு! செங்கோட்டையனுடைய யோக்கியதையை பாரு! இந்த பக்கம் கலைஞர் படம், இந்த பக்கம் ஸ்டாலின் படம்..
திமுகவின் பி டீம் செங்கோட்டையன்
அப்பவே திமுகவின் பி டீமுக்குப் போயிட்டார். நான் கண்டுபிடிச்சுட்டேன். நீ திமுக-வுடைய உளவாளியா இருப்பதை கண்டுபிடிச்சாச்சு!
என்னைக்கு கலைஞர் படத்தையும், ஸ்டாலின் படத்தையும் போட்டுட்டு போய் நீ விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு கொடுத்தயோ, அப்பவே உன்னுடைய முகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். கோபி
தேர்தல்ல ஒரு லட்சம் ஓட்டுல ஜெயிப்பேன். உன்னால சவால் விட முடியுமா?
செங்கோட்டையன் அவர்களே, நான் எப்பேர்ப்பட்டவன்னு உனக்குத் தெரியாது. என்னுடைய முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கே, இன்னொரு பக்கம் பார்த்ததில்லை “ என்று எடப்பாடி பிரசாரம் செய்தார்.
===============