கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் எதிர்ப்பு: திமுகவை சாடிய EPS

Edappadi Palanisamy Slams DMK on SIR in Tamil Nadu : கள்ள ஓட்டி போட முடியாது என்பதால் தான் எஸ்ஐஆர் என்றாலே திமுகவினர் அலறுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Edappadi Palaniswami criticized, DMK for shouting against SIR, because it cannot be faked
Edappadi Palaniswami criticized, DMK for shouting against SIR, because it cannot be fakedGoogle
1 min read

எஸ்ஐஆர் என்றால் அச்சம் தான்

Edappadi Palanisamy Slams DMK on SIR in Tamil Nadu : கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள்.

கள்ள ஓட்டு போட முடியாது

தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால் திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை

கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

காவலர்களின் அராஜக போக்கு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திருவண்ணாமலையிலும் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாதிப்பு

திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் சமூக நலத்துறை அமைச்சரே பேசியுள்ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.

திமுக ஆட்சியில் 6,400 கொலைகள்

50 மாத திமுக ஆட்சியில் 6,400 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இவ்வளவு கொடுமைகளுக்கு இடையிலும் இதுவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை.

எஸ்ஐஆரை அதிமுக ஆதரிக்கிறது

அதிமுக எஸ்ஐஆரை ஆதரிப்பது குறித்து விமர்சிக்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது

எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை, அதிமுக தான் ஆட்சி அமைக்கும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமித் ஷா ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவையும் எங்களையும் ஆளுங் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

விஜய் பேசுவது இயல்பான ஒன்று

எங்களுக்கும் திமுகவுக்கு இடையே தான் 2026ல் போட்டி என்று விஜய் கூறுகிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது இயல்பான ஒன்று தான்’ இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in