”பெண்கள் இடஒதுக்கீடு, முதல்வரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” : தோல்வி பயத்தால் எதிர்க்கிறார்! : எடப்பாடி காட்டம்...

பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று, எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Edappadi Palaniswami has criticized Chief Minister Stalin for not being able to tolerate reservation for women
Edappadi Palaniswami has criticized Chief Minister Stalin for not being able to tolerate reservation for womengoogle
1 min read

பெண்கள் இடஒதுக்கீடு

Edappadi Palaniswami has criticized Chief Minister Stalin for not being able to tolerate reservation for women : மக்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இதற்காக 16ம் தேதி முதல் 18ம்தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

33% இடஒதுக்கீடு உறுதி

இந்த கூட்டத்தில் கொண்டு வரப்படும் மசோதா மூலம், 2029 மக்களை தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

பின்னர் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் இந்த ஒதுக்கீடு படிப்படியாக அமலுக்கு வந்து விடும்.

பிரதமர் மோடி உறுதி

33% இடஒதுக்கீடு காரணமாக தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறையும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், மாநிலங்களுக்கான இடங்கள் குறையாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தொகுதி வரையறையால், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

இதை மிரட்டலாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை, 1950-60 களில் பார்த்த பழைய திமுகவை இந்தியாவே பார்க்கும் என்று கூறியுள்ளார்.

முதல்வருக்கு எடப்பாடி பதில்

இதுபற்றி, திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 5 மாநிலங்களில் மட்டும் தான் தேர்தல் நடக்கிறது.

மற்ற மாநிலங்களில் இல்லை தேர்தல ஃநேரத்தில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை, என முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை முதல்வர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் தோல்வி பயம் காரணமாக அதை அவர் எதிர்ப்பதாக எடப்பாடி காட்டமாக விமர்சித்துள்ளார்.

பெண்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் கோரிக்கையை நிறைவேற்றவே, நாடாளுமன்றத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதை ஜீரணிக்க முடியாமல் தான் முதல்வர் எதிர்க்கிறார் என்று தெரிவித்தார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in