”பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு கிடையாது!”: EPS தாக்கு

Edappadi Palaniswami criticized Vijay பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு கிடையாது என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Edappadi Palaniswami has criticized Vijay for not having the ability to deal with problems
Edappadi Palaniswami has criticized Vijay for not having the ability to deal with problems
1 min read

விஜய் பற்றி விமர்சனம்

ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கரூரில் ஒரு பிரச்னை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்னை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்று விட்டார்.

அப்புறம் எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார். ஒரு பிரச்னையை சந்திக்கும் திறன்கூட அவருக்கு இல்லை.

தேர்தலின் போது திட்டங்கள் நிறுத்தப்படாது

சட்டப் பேரவை தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என எங்களையும், பாஜகவையும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலின்போது உரிமைத் தொகை நிறுத்தப்படவில்லை.

அப்படி இருக்கையில் எப்படி வரும் தேர்தலில் நிறுத்த முடியும். ஒரு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனை தேர்தல் நேரத்தில் நிறுத்த முடியாது என்பதை நாடே அறியும்.

ஸ்டாலினுக்கு தோல்வி பயம்

2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் இந்த ரூ.5000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும், கோடை காலத்துக்காக ரூ.2000 சிறப்புத் தொகையும் கொடுத்துள்ளார்.

2026ல் மட்டுமே கோடைக்காலமா?

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது, அப்படியானால் 2026ல் தேர்தல் வரும்போது மட்டும்தான் ஸ்டாலினுக்கு கோடை காலம் தெரிகிறதா?

செல்வாக்கை இழந்த திமுக

திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் படும் கஷ்டங்களை பார்த்து உரிமைத் தொகையை கொடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சித்தான் இந்த பணத்தை கொடுக்கின்றார், வாக்குகளை பெறுவதே திமுகவின் நோக்கம்.

27 மாதங்களே கழித்தே உரிமைத்தொகை

2021 தேர்தலின்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சியமைத்து 27 மாதம் கழித்துதான் உரிமைத் தொகையை வழங்கினார். நாங்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போதும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

திமுக அரசுக்கு கேள்வி

20 லட்சம் பெண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 55 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?

அதிமுக கூட்டணி - மேலும் சில கட்சிகள்

அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. தவெகவின் வருகை யாரை பாதிக்கும் எனத் தெரியவில்லை. விஜய் இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை.

அவர்கள் தேர்தலை சந்தித்தால்தான் என்ன செல்வாக்கு உள்ளது எனத் தெரியும். தமிழக மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள்.

செய்தியாளர்களை சந்திப்பது கடமை

ஒரு கட்சியை நடத்தினால், நிருபர்கள், மக்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியது தலைவரின் கடமை.

இது ஜனநாயக நாடு. யாரும் கட்சி தொடங்கலாம். மக்கள் அங்கிகரித்தால் வெற்றி பெறலாம்” என்றார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in