கிட்னி முறைகேடு : திமுகவின் சுயநல போக்கு : எடப்பாடி எச்சரிக்கை

EPS Slams DMK on Kidney Theft : கிட்னி முறைகேடு வழக்கில், சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு, சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami said people of Tamil Nadu will teach the DMK a lesson in the assembly elections
Edappadi Palaniswami said people of Tamil Nadu will teach the DMK a lesson in the assembly electionsGoogle
1 min read

திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனை

EPS Slams DMK on Kidney Theft : இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.

அரசு வழக்கறிஞர்கள் மெத்தனம்?

இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்

இந்த உத்தரவைக் காரணம் காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

'குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக' தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன்.

சட்டசபை தேர்தலில் சரியான பாடம் :

சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறியுள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in