வேலுமணி தரப்புக்கு எடப்பாடி செக்! : ஆளுநரிடம் புகார், அடுத்து வழக்கு : பதவி தப்புமா? 25 எம்எல்ஏக்களும் திக்திக்...

தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக தரப்பினரை வழிக்கு கொண்டு வர ஆளுநரிடம் புகார், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என காய்களை நகர்த்த எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.
Edappadi plans to move the pieces, such as filing a complaint with the Governor and a case in the Supreme Court
Edappadi plans to move the pieces, such as filing a complaint with the Governor and a case in the Supreme Courtgoogle
1 min read

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதல்வராக பொறுப்பேற்றார் விஜய்.

நம்பிக்கை வாக்கெடுப்பு விஜய் வெற்றி

120 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்க, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது தான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று இருக்க, அதில் ஒரு பிரிவினர் அதாவது எஸ்பி. வேலுமணி, சிவி.சண்முகம் தலைமையில் தவெக அரசை ஆதரித்தது.

எடப்பாடி தரப்பு எதிர்ப்பு

இதற்கு சட்டமன்றத்தில் எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும், அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரின் ஆதரவையும் சேர்த்து 144 பேர் ஆதரவோடு தவெக அரசு வெற்றி பெற்றது.

அரசுக்கு எதிராக எடப்பாடி தரப்பு மட்டும் அதாவது 22 பேர் வாக்களித்து இருந்தார்கள்.

கட்சி தாவல் தடைச்சட்டம்

கட்சி தாவல் தடைசட்டத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வெளியேறினால் மட்டுமே, பதவி பறிபோகாது. அப்படி பார்த்தால், வேலுமணி தரப்பிற்கு 31 பேரின் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ 25 தான். எனவே, சபாநாயகர் எடுக்கும் முடிவை பொருத்தே இவர்களின் எதிர்காலம்.

எடப்பாடி தீவிர ஆலோசனை

இதனிடையே, தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, சென்னை வந்துள்ள பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே கோவா ஆளுநராக இருந்த அர்லேகர், சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். இந்த விவகாரத்தில் விரைந்து ஒரு முடிவு எடுக்குமாறு சபாநாயகருக்கு அவர் அறிவுறுத்தினால், சிக்கல் தான்.

நீதிமன்றம் செல்லும் எடப்பாடி?

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தை நாடவும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருக்கு. அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

25 பேருக்கு சிக்கல்...

அப்படி என்றால், அவரது உத்தரவை மீறி அரசுக்கு ஆதாரவாக வாக்களித்தது 25 பேருக்கும் சிக்கலாக முடியும். ஒருவேளை அவர்களின் எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டால், தமிழகம் ஒரு மெகா இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கும்.

தமிழகத்தில் இடைத்தேர்தலா?

விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட 26 தொகுதிகளில் இடைத் தேர்தல் வரவும் வாய்ப்பு உள்ளது.

\=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in