இளைஞர் மரணம் சிபிஐ விசாரணை தேவை:எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

காவல் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கை, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இளைஞர் மரணம் சிபிஐ விசாரணை தேவை:எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
https://x.com/hashtag/aiadmk?
1 min read

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை! ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல்.

இவற்றை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டசபையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

'ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்' என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி, துளிக்கூட நம்பவில்லை! முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழக மக்கள்.

போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBIக்கு மாற்ற வேண்டும்.இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும். வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்’, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in