ஓங்கும் எடப்பாடி கை : எடப்பாடியுடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்: புகார் வாபஸ்

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர்
Edappadi's hand is growing: Velumani's supporters reconcile with Edappadi
Edappadi's hand is growing: Velumani's supporters reconcile with Edappadi google
2 min read

ஆட்சி அமைத்த தவெக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போராடியது.

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க ஒரு வழியாக 120 பேரின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது. ஆட்சி அமைத்தார் விஜய்.

தமிழக அரசியல் களம்

இதனிடையே திமுக - அதிமுக கூட்டணி அமைத்து எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.ஒருவழியாக அனைத்து கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய், எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. இது விமர்சனமாகவும் பேசப்பட்டது.

அதிமுகவில் பிளவு

சட்டமன்ற கூட்டத்திற்கு எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களும், எஸ்பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களும் தனித்தனியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பேசப்பட்ட நிலையில், கட்சி ஒற்றுமையுடன் இருப்பதாக, எடப்பாடியும், வேலுமணியும் கூறினர்.

இரண்டாக உடைந்த அதிமுக

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக இரண்டாக உடைந்தது வெளிச்சத்திற்கு வந்தது.அரசுக்கு ஆதரவாக வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களிக்க, எதிராக எடப்பாடி தரப்பை சேர்ந்த 22 பேர் வாக்களித்தனர்.

அதன்பிறகு, இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இப்போது உண்மையான அதிமுக என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

இந்தநிலையில், இரண்டு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் இன்று நடந்தது. வேலுமணி தரப்பை சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் சபாநாயராகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள்.

மூன்றாக உடைந்த அதிமுக

இதன் காரணமாக அதிமுக மூன்றாக உடைந்து இருக்கிறது. எடப்பாடி தரப்பிற்கு 22 பேர், வேலுமணி தரப்பிற்கு 22 பேர், ராஜினாமா எம்எல்ஏக்கள் 3 பேர் என அதிமுக நிலை உள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த கையோடு, மூன்று பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்கள். அப்போது தங்களை தவெகவில் இணைத்து கொள்வதாக, அவர்கள் கூறினர். அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படுவோம் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

இதனிடையே, எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

வேலுமணி:எடப்பாடி சமரசம்

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்

வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் தர மறுப்பு

தவெக விற்கு வாக்களித்த வேலுமணி தரப்பில் இருந்த 12 பேருக்கு வாரிய தலைவர் பதவி தரவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளதால் அவர்களை அமைச்சரவையில் சேர்க்க கடும் எதிர்ப்பு எழுந்தது.

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வேலுமணி ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க விஜய் மறுத்து விட்டது குறிப்பிடதக்கது

அதிமுக விவகாரத்தில் நாளை அறிவிக்கப்படும்

அதிமுக விவகாரம் தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in