எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு : 45 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து!

Egmore Railway Station Renovation : எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, சென்னை கடற்​கரை - தாம்​பரம், செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் 45 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
Egmore Railway Station renovation Work Begins Suburban trains cancelled for 45 days in Chennai
Egmore Railway Station renovation Work Begins Suburban trains cancelled for 45 days in ChennaiSource : Google
1 min read

சைலேந்திர சிங் உரை

Egmore Railway Station Renovation Work : மின்​சார ரயில்​களின் சேவை, ​ எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்​.5-ம் தேதி வரை 45 நாட்​களுக்கு சுமார் 44 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. இதுகுறித்​து, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்​றும் 11-ல் இருந்து இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் வரும் 20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும் என்று தெரிவித்தார்.

தற்காலிக அட்டவணை

சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் மற்​றும் செங்​கல்​பட்​டுக்கு இயக்​கப்​படும் புறநகர் மின்​சார விரைவு ரயில்​கள் 6-வது நடைமேடை​யிலும், செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை வரை இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் 5-வது நடைமேடை​யிலும் இயக்​கப்​படும். இந்த 45 நாட்​களி​லும் தற்​காலிக அட்​ட​வணைப்​படி மட்​டுமே மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும். புதிய எண்​கள் மற்​றும் கால அட்​ட​வணை​யுடன் 160 மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும். 80 ரயில்​கள் சென்னை கடற்​கரை​யில் இருந்​தும், 80 ரயில்கள் செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்​தும் இரு மார்க்​க​மும் இயக்​கப்​பட​வுள்​ளன.

மார்ச் இறுதியில்

வேளச்​சேரி- பரங்​கிமலை பறக்​கும் ரயில் தடத்​தில் பாது​காப்பு சோதனை முடிந்​த ​பிறகு, மார்ச் இறு​தி​யில் ரயில் சேவை தொடங்​கும். கிளாம்​பாக்​கம் ரயில் நிலை​யம் பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் திறக்​கப்​படும் என்று அவர் கூறினார். ரயில்​கள் ரத்து செய்​வது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் புறநகர் மின்​சார ரயில் சேவை​களின் புதிய அட்​ட​வணை​யின்​படி, தற்​போது இயக்​கப்​படும் 204 ரயில் சேவை​களுக்​குப் பதிலாக மொத்​தம் 160 ரயில் சேவை​கள் இரு​மார்க்​க​மாக இயக்​கப்​படும்.

செங்​கல்​பட்டு மற்​றும் தாம்​பரம் முதல் கடற்​கரை வரை மொத்​தம் 67 ரயில் சேவை​கள் இயக்​கப்​படும். எழும்​பூர் நிலை​யத்​திலேயே 11 ரயில் சேவை​கள்​ நிறுத்​தப்​படும்​. புறநகர்​ சேவை​கள்​ குறைக்​கப்​பட்​டதால்​ ​பா​திக்​கப்​பட்​ட பயணி களுக்​கு உத​வும்​ வகை​யில்​, தெற்​குர​யில்​வே, சிறப்​பு சேவை​களை இயக்​க பெருநகர ​போக்​கு​வரத்​துக்​ கழகத்​திடம்​ கோரிக்​கை ​விடுக்​கப்​பட உள்​ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in