அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் : தேர்தல் ஆணையம் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறை என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்ட்டுள்ள நிலையில் அதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது
Election Code of Conduct that has come into force - What are the guidelines stated by the Election Commission?
Election Code of Conduct that has come into force - What are the guidelines stated by the Election Commission? google
2 min read

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 தொடர்பான முக்கிய வழிகாட்டு வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும் மே 6ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

50,000 ரூபாய் வரை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி

ஒரு நபர் உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல முடியும். 50,000 ரூபாய்க்கு மேல் வெளியே எடுத்து செல்லும் பட்சத்தில் அந்தப் பணத்திற்கான ஆதாரத்தை வங்கி ரசீது, தொழில்முறை ஆவணங்கள் போன்றவை காணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு பொருட்களுக்கு கட்டுப்பாடு

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய நிலையில் உள்ள புதிய பொருட்கள் அல்லது பரிசுகள் வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் போன்றவற்றின் மதிப்பும் 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

தங்கம், வெள்ளி - ரசீது அவசியம்

அதிக அளவிலான தங்கம் அல்லது வெள்ளி நகைகளை எடுத்துச் செல்லும்போது அதற்குரிய கொள்முதல் ரசீது அல்லது ஆவணங்கள் கையில் இருப்பது கட்டாயம் இல்லை எனில் அது பரிமுதல செய்யப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது

அமலுக்கு வந்த விதிமுறைகள் நாம் என்ன செய்ய வேண்டும்

சரியான ஆவணங்களை உடன் எடுத்து செல்லுதல்

50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்ல நேரிட்டால், அது எதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான வங்கிப் பரிவர்த்தனை ரசீது அல்லது தொழில்முறை ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு

மேலும் பறக்கும் படை (Flying Squad) அல்லது நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) வாகனத்தைச் சோதனையிாட நேரிட்டால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

1950ல் புகார் தெரிவிக்கலாம்

தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது cVIGIL என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம் .

அமலுக்கு வந்த விதிமுறைகள்

உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவு பணத்தை வங்கிக்கு எடுத்துச் செல்லவோ அல்லது அங்கிருந்து எடுக்கவோ,தேவையற்ற பண பரிமாற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும் .

எந்தவொரு தனிப்பட்ட நபரோ ,அரசியல் கட்சி சார்பிலோ அல்லது வாக்காளர்களைக் கவரும் வகையில் பரிசுப் பொருட்கள், மதுபானம் அல்லது பணம் விநியோகிப்பது, மற்ற இதர பொருட்களை வழங்க வேண்டாம் என்றும் மாறாக வழங்கும் பட்சத்தில் அது குற்றமானதாக கருதப்படும் .

அனுமதி இன்றி பொதுச் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது, விளம்பரம் செய்வது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஊர்வலங்கள் நடத்துவது,பொது மேடை பேச்சு ,தேவையற்ற அரசியல் விளம்பரங்கள் போற்றவற்றிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை எப்படி மீட்பது

ஒருவேளை நீங்கள் கொண்டு சென்ற பணம் நியாயமான காரணங்களுக்காக இருந்து, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், மாவட்ட அளவில் உள்ள முறையீட்டுக் குழுவிடம் (Grievance Committee) மனு அளித்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது .

இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட தொகை 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், அது வருமான வரித்துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு பின்பு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்ட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in