தமிழகத்தில் SIR பணிகள் : பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் எஸ்ஐஆரை பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்
Election Commission appoints observers to monitor SIR work in Tamil Nadu
Election Commission appoints observers to monitor SIR work in Tamil Nadu
1 min read

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள்

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நாளை மறுநாள் வரை ( 11ம் தேதி ) வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை 99 சதவீதம் பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

இந்தநிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு, மத்திய கூட்டுறவு அமைச்சக இணை செயலர் ராமன் குமார், எஸ்.ஐ.ஆர்., பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார

சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை செயலர் குல்தீப் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் நீரஜ் கர்வால்; புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி...

விருதுநகர், ராமநாத புரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இணை செயலர் விஜய் நெஹ்ரா ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் கண்காணிப்பர்

இவர்கள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிப்பார்கள். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாக செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுவர்.

வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த யாரும் விடுபடக்கூடாது. தகுதியற்ற யாரும் சேர்க்கப்படக் கூடாது என்ற அடிப்படை கொள்கை பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

6,36,44,938 படிவங்கள் பதிவேற்றம்

தமிழகத்தில், 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று வரை, 6 கோடியே 40 லட்சத்து 59,971 பேருக்கு, எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட, 6 கோடியே 36 லட்சத்து 44,938 படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 54,616 பேர் இன்னும் எஸ்.ஐ.ஆர்., படிவம் பெறவில்லை. அவர்களை ஓட்டுச் சாவடி அலுவலர்கள் தேடி வருகின்றனர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in