தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் : புதிய அதிகாரிகள் நியமனம் : தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக அரசின் தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்திருக்கிறது.
Election Commission changed Chief Secretary of the Tamil Nadu and DGP of Anti-Corruption Department
Election Commission changed Chief Secretary of the Tamil Nadu and DGP of Anti-Corruption Departmentgoogle
1 min read

தமிழகத்தில் 23ம் தெதி வாக்குப்பதிவு

Election Commission of India (ECI) on April 8, 2026, ordered the immediate transfer of Tamil Nadu Chief Secretary N. Muruganandam and appointed senior IAS officer M. Sai Kumar as the new Chief Secretary. The ECI also directed the appointment of Sandeep Mittal as Director General of Police (DVAC) : தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அடுத்து அரியணையில் அமர போவது யார் என்பதை முடிவு செய்யப் போகும் இந்தத் தேர்தல், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நான்கு முனைப்போட்டி

நான்கு முனைப்போட்டி நிலவும் சூழலில், ஏற்கனவே, சட்டம் - ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக டிஜிபி பொறுப்பினை ஏற்றார்.

தலைமைச் செயலாளர் மாற்றம்

இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாய்குமார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்

இதேபோன்று, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புகார் வந்தால் மாற்றம்

ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் இருந்தவர்கள், புகாருக்கு ஆளான அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்து இருக்கிறது.

தவெக தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு தொடர் இடையூறுகள் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கவனம் பெற்று இருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in