Bihar: EVMல் வேட்பாளர் வண்ண புகைப்படம் : பீகார் தேர்தலில் அறிமுகம்

Colour Photo on EVM/VVPAT in Bihar Assembly Election 2025 : வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறச் செய்யும், புதிய வசதி பிகார் சட்டமன்ற தேர்தலில் அறிமுகமாகிறது.
Colour Photo on EVM/VVPAT in Bihar Assembly Election 2025 in Tamil
Colour Photo on EVM/VVPAT in Bihar Assembly Election 2025 in Tamil
1 min read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் :

Colour Photo on EVM/VVPAT in Bihar Assembly Election 2025 : நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரில் கருப்பு, வெள்ளை புகைப்படம் இடம்பெற்று இருக்கும்,

பொதுமக்கள் புகார், ஆணையம் நடவடிக்கை :

சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களின் போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்(EVM/VVPAT), வரிசை எண், வேட்பாளர் பெயர், வேட்பாளரின் புகைப்படம் மற்றும் அவர் போட்டியிடும் சின்னம் உள்ளிட்டவை அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும். தாளில் அச்சிடப்பட்டு இந்த புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்கும். கருப்பு, வெள்ளை புகைப்படம் தெளிவாக இல்லாத சூழலில், வாக்களிக்கும் போது குழப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் :

எனவே, இந்தக் குறையை களைய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் புகைப்படம்(Candidate Colour Photo in EVM Machine), வண்ண புகைப்படமாக இடம் பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி, இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மின்னணி இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படம் இடம்பெறும் வசதி 2015ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே பெயரில் பலரும் வேட்பாளர்களாக போட்டியிடும் போது வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களின் புகைப்படம் சேர்க்கப்பட்டது.

மேலும் படிக்க : பிகாரில் நவம்பரில் தேர்தல் ! : 3 கட்டங்களாக நடத்த பரிசீலனை

வாக்குச்சீட்டில் மாற்றம் :

இந்நிலையில், வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காணுவதில் சிறந்த தெளிவுத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, வண்ண புகைப்படம் வாக்கு இயந்திரத்தில் இடம் பெற்றிருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக, தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் பிரிவு 49பி இன் கீழ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்குச்சீட்டுகளின் வடிவமைப்பு மற்றும் அச்சிடுதலுக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, வாக்கு இயந்திரத்தில் வைக்கப்படும் வாக்குச்சீட்டில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in