தமிழக சட்டமன்ற தேர்தல் : மார்ச் 15 - 16ல் அட்டவணை, ஏப்ரல் 23ல் வாக்குப்பதிவு! : தேர்தல் ஆணையம் பரிசீலனை

தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Election Commission is reportedly considering holding the Tamil Nadu Assembly elections in a single phase on April 23rd
Election Commission is reportedly considering holding the Tamil Nadu Assembly elections in a single phase on April 23rdgoogle
1 min read

சட்டமன்ற தேர்தல்

TN Assembly Election 2026 Latest : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக அரசின் பதவிகாலம் மே 10ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழு வீச்சில் களமிறங்கி இருக்கிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சார பணிகளை படிப்படியாக தொடங்கி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், சூறாவளி பிரசாரம் செய்ய அவை முடிவு செய்துள்ளன.

ஐந்து மாநிலத் தேர்தல்

இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி சாத்தியமான சூழல் தான் நிலவுகிறது. அதிமுக, பாஜக கூட்டணிக்கு தவெக வந்தால், மூன்று முனைப்போட்டியாக மாறும்.

தேர்தல் ஆணையம் ஆலோசனை

5 மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு 5 மாநிலங்களிலும் ஆலோசனை நடத்தி இருக்கிறது.

வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர்கள் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசனை நடத்தப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தும் கருத்துக் கேட்கப்பட்டது.

மார்ச் 15,16ல் தேர்தல் அட்டவணை!

தேர்தல் நடைபெறும் தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மார்ச் 15 அல்லது 16 வாக்கில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்ப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்.23ல் வாக்குப்பதிவா?

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரம் மாதம் 23ஆம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை

5 மாநிலத் தேர்தல் நிறைவு பெற்றதும், ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் பல கட்டங்களாக தேர்தல் இருக்கும் என்றும், மற்ற நான்கு மாநிலங்களில் ஒரே நாளில் வாக்குப்பதிவு இருக்கும் என்றும் தெரிகிறது.

தேர்தல் தேதியை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்துக் கிடக்கின்றன.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in