சென்னை வரும் தலைமைத் தேர்தல் ஆணையர்
TN Assembly Election 2026 : சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் குறித்தான ஏற்பாடுகளை பார்வையிட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
மார்ச்சில் தேர்தலுக்கான அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு மார்ச் மதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கான முன்னேற்பாட்டு செயல்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. வழக்கமாக தேர்தல் குறித்தான செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னரே இறுதி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
7 பேர் கொண்ட குழு ஆய்வு
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகிறது .
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை
.முதல் கட்டமாக தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் தலைமை தேர்தல் ஆணையர் வருமான வரி, சுங்கத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
அங்கீகரிக்கப் பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்ட பின், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறர் தலைமை தேர்தல் அதிகாரி.
தேர்தல் அதிகாரி வருகை : தலைமைச் செயலர் ஆலோசனை
தலைமை தேர்தல் அதிகாரி வருகையை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக்கு பிறகு, மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
=====