ராஜ்யசபா சீட் : காலியாகும் 6 இடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல் : அதிமுகவின் 2 இடம் யாருக்கு ?
காலியாகும் 6 இடங்கள்
TN Rajya Sabha Election 2026 Date Announced : வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தலானது நடைபெற உள்ளது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியாகும் 6 இடங்களில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்குளையும் பெறும். இந்த நிலையில் அதிமுக இரண்டு இடங்களை யாருக்கு ஒதுக்கும் என்ற் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் அந்த 2 இடம் யாருக்கு
பாமக, தேமுதிக கூட்டணியில் இடம்பெறச் செய்ய அதிமுக செயல்பட்டு வருகிறது. கூட்டணிக்கு வர ராஜய்சபா சீட் என்ற நிபந்தனை முன்னால் நிற்கிறது.
ஆனால் அதிமுகவிடம் இருப்பது இரண்டு ராஜ்யசபா இடங்கள் மட்டுமே, எனவே அக்கட்சின் ்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பே தற்போது எழுந்துள்ளது.
வேட்புமனு தாக்கல்
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கும் என்றும் மனுதாக்கல் செய்வதற்கு இறுதி நாள் மார்ச் 5 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .
தமிழ்நாடு உட்பட காலியாக உள்ள 10 மாநிலங்களைவை எம்.பி தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியாகும் 6 இடங்கள்
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தலானது நடைபெற உள்ளது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.
பதவிக்காலம் முடியும் எம்பிகளின் விவரம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவில் இருந்து திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோவன், கனிமொழி சோமு, செல்வராஜ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுக பொறுத்தவரை தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் உள்ள நிலையில் இவர்களது பதவிக்காலம் ஏப்ரல் 02 ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது.
தொகுதி பங்கீடு கோரும் கட்சிகள்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டின் போது சட்டமன்ற தொகுதிகள் உடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சேர்த்து கட்சிகள் கேட்டு வருகின்றனர்.
ராஜ்யசபா சீட் - துண்டுபோடும் தேமுதிக
இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டு வருகிறது.
இதனால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விரைவில் இதற்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்ககப்படுகிறது. மேலும் அதிமுகவில் அந்த இரண்டு சீட் யாருக்கு கொடுக்கப்போகிறார்க்ள என்ற எதிர்பார்ப்பே தற்போது எழுந்துள்ளது .
