"தேர்தல் மன்னன்" பத்மராஜன் 253-வது முறையாக வேட்பு மனு தாக்கல் : மேட்டூரில் போட்டியிட விருப்பம்!

தேர்தல் மன்னன் என அடைமொழி பெயர் பெற்ற பத்மராஜன் என்பவர் 253-வது முறையாக மேட்டூரில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்
"Election King" Padmarajan files nomination for 253rd time: Petition to contest from Mettur
"Election King" Padmarajan files nomination for 253rd time: Petition to contest from Mettur google
1 min read

தேர்தல் மன்னன் மீண்டும் மனுதாக்கல்

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார்.

இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் . அந்த வகையில் வருகிற சட்டமனற்ற தேர்தலாலுக்காக வேட்மனுவை தாக்கல் செய்தார்

அனைத்து தலைவர்களையும் எதிர்த்து போட்டி

பல ஆண்டுகளாகவே அனைத்து தலைவர்களையும் எதிர்த்து போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் ,அந்த வகையில் இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக இதனை செய்து வருகிறார் .

இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார்.

253 -வது முறையாக மனு தாக்கல்

இவரது இந்த சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மன்னன் பத்மராஜன் 253 -வது முறையாக மேட்டூர் கோட்டாச்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலுருமான சுகுமாரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்

தேர்தலுக்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவு

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியில் 6,700 ஓட்டுகள் வாங்கியது இவருடைய அதிகபட்ச வாக்காகும். இது குறித்து அவர் கூறும்போது ,

திருச்சியில் நடந்த இடைத் தேர்தலில் சரத்குமாரை விட அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவித்தார் . இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேலாக செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in