சட்டப்பேரவை தேர்தல்
இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் இறுதியாக நிறைவு பெற்றுள்ளது. அசாம் , புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு முன்னதாக ஒரே கட்டமாக தேர்தலானது நடைபெற்றது.
பின்னர் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேற்றஹ்லனது நடைபெற்றது, இதில் இரு கட்டமாக மேற்கு வணக்கத்திற்கு தேர்தலானது நடைபெற்றது.
அனைத்து கட்சிகளின் தீவிர பரப்புரை பிரச்சாரத்திற்கு பிறகு ஐந்து மாநிலங்களுகுகன் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் : வாக்கு பதிவு
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து வாக்கு மையங்களிலும் ,வாக்கு எண்ணுபவர்க்ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன
வாக்கு பதிவு முன்நடவடிக்கை ;தமிழகம் வரும் தேர்தல் அதிகாரிகள்
சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து இருக்கும் நிலையில் ,தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தல்
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
எவ்வித அசம்பாவிதம், மறு வாக்குப்பதிவும் இன்றி நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 85.10 சதவீதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகியுள்ளன.
கண்காணிப்பில் வாக்கு மையங்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனைத்து வாக்கு சாவடி மையங்களும் தீவிர கண்காணிப்பில் , தேர்தலை ஆணையத்தின் பேரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வந்த துணை ராணுவப் படையினரில் ஒரு பிரிவினர் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு தீவிரம்
மே 4 ம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் , பாதுகாப்பு கருதி 18 ஆயிரம் போலீஸார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.
முதலில் தபால் வாக்கு எண்ணப்படும்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று , முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். அதன்பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் பார்வையாளர்கள்
தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட வரும் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர். இதற்கு முன்னர் 62 மையங்களிலும் பணியாற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், சென்னையில் 234 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
===========