மின்சாரத்துறை : 70 ஆயிரம் காலி பணியிடங்கள், இந்த ஆண்டு 15,000 பணியிடங்கள் நிரப்ப உத்தரவு : அமைச்சர் நிர்மல்குமார்..!

மின்சாரத் துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
Electricity Department: 70,000 vacancies; order issued to fill 15,000 posts this year – Minister CTR Nirmal Kumar.
Electricity Department: 70,000 vacancies; order issued to fill 15,000 posts this year – Minister CTR Nirmal Kumar. google
1 min read

இந்த ஆண்டிற்குள்15,000 பணியிடங்கள் நிரப்ப முடிவு

மின்சாரத் துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இந்த ஆண்டிற்குள் 15,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்

மின்சாரத்துறை அமைச்சர்

மின்சாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய சூழல் இருப்பதாகவும் , இது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது ,அதில் காலிபணியிடங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டதாகவும் .

மின்சாரத் துறையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது' என்று முதல்வரிடம் கூறினோம். உடனடியாக அவர் ஒப்புதல் அளித்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

மின்சார துறையை சரிசெய்வதற்கான நேரம் வந்து விட்டது

மின்சார துறையில் தொடர்ந்து ஏற்படும் சிக்கலை தடுப்பதற்காகவும் , மின்வெட்டு தட்டுப்பாட்டை சரிசெய்வதற்காகவும் இத்தனை ஆண்டுகளாக இந்த துறையில் பணி நிரந்தரம் என்ற ஒன்று நடந்ததே இல்லை என்றும் இத்தனை காலிப் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டது கிடையாது , தவெக அரசில் இந்த நிகழவானது நடைப்பெற இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்

கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத் துறை சீரழிந்து கிடக்கிறது. அதை சரிசெய்வதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

மின்சார துறை சர்ந்த வெள்ளை அறிக்கை

தொடர்ந்து பேசிய அமைச்சர் , மின்சாரத் துறை சார்ந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், அதில் மின்சாரதுறை சார்ந்த ஊழல்கள் எவ்வாறு நடைபெற்றுள்ளது , எவ்வளவு காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்பன போன்றவற்றை வெள்ளை அறிக்கைக்கு பிறகு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இங்கு 401 பேருக்கும் நானே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை முதல்வர் செய்வார். மக்களுக்கு பயந்து மட்டுமே இந்த அரசு செயல்படும். வேறு யாருக்கும் பயப்படாது என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்

பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர்

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள்மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள், என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது,

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in