”அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி” : துணை பொதுச் செயலாளர்களாக நியமித்தார் விஜய்..!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு தவெகவில் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
Eleven former AIADMK ministers have been appointed as Deputy General Secretaries in TVK
Eleven former AIADMK ministers have been appointed as Deputy General Secretaries in TVKsource:thamizhalai,ai generated
1 min read

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்துல ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக ஆட்சியை பிடிச்சது. முதல்வரானாரு ஜோசப் விஜய். தேர்தல் தோல்வியால, அதிமுகவில் பிளவு ஏற்பட, ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவிய ராஜினாமா செஞ்சிட்டு, தவெகவில இணைஞ்சிட்டாங்க.

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

இதேபோல அதிருப்தியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தவெகவில் ஐக்கியமானங்க. அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதிமுகவினருக்கு தவெகவில் பதவி

அந்தவகையில் தவெகவில் இணைஞ்ச அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்து இருக்காரு முதல்வர் விஜய்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ். எம்.ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி.ராமலிங்கம்..

எம்.ஆனந்தன், கடம்பூர் ராஜூ, கே.டி.பச்சைமால், வெல்லமண்டி நடராஜன்,என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், எஸ்.வளர்மதி ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இதேபோல், சந்தீப் ஆனந்த், கே.ஜி.முத்து வெங்கடேஸ் வரன், தொள்ளமூர் கண்ணன், வி.சி.ஆர் குமரன் ஆகியோரும் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகின்றனர்.

தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

மடத்துக்குளம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக சி.மகேந்திரன் நியமிக்கப்படுகிறார். புதிய நிர்வாகிகளுக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in