மகப்பேறு காலத்தில் பெண் பணியாளர்களுக்கு ஆதரவு அதிகரிப்பு; புதிய நடைமுறை அமல்:தமிழக அரசு அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்புக் காலத்தில் கூடுதல் நலன்களைப் பெற வழிவகுக்கும் புதிய அறிவிப்பு வெளியீடு...
Enhanced Support for Women Employees During Maternity Leave;
Enhanced Support for Women Employees During Maternity Leave; Google
1 min read

அரசு பெண் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை :

இன்று தமிழக சட்டசபையில் ஒரு முக்கிய அறிவிப்பாக மூன்றாவது குழந்தை பெரும் அரசு வேலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு ஒரு வருடம் பணியிலிருந்து விடுப்பு மற்றும் அதற்கான ஊதியத்தையும் அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது இதனை தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத் குமார் தெரிவித்தார்

முன்பு இருந்த நடைமுறை :

இதுவரை, அரசு ஊழியர்களுக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய சலுகையாக 3வது குழந்தைக்கும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பேசிய அமைச்சர் சாத்தகுமார், அவையில் உறுப்பினர்கள் கூறிய விவரங்களை நான் குறிப்பெடுத்துக் கொண்டேன், அவற்றை பரிசீலித்து, முதலவரின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்துவேன் என்றும் உறுதிமொழி அளித்தார்.

பெண்களின் நலனை கருத்தில் கொண்ட நடவடிக்கை:

கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நலப் பராமரிப்பு தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடப் பொறுப்புகளுக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த இந்த சலுகை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகு கவனம் பெற்ற விவகாரம்:

மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துகளும் அரசின் விதிமுறைகளும் பரவலான விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

பெண்கள் நலக் கொள்கையில் முக்கிய அறிவிப்பு:

பெண்கள் பணியாளர்களின் மகப்பேறு நலனை பாதுகாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அரசு சேவையில் உள்ள பெண்களுக்கு, குடும்ப பொறுப்புகளையும் பணிப் பொறுப்புகளையும் சமாளிக்க இந்த விடுப்பு சலுகை உதவிகரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in