“கூட்டணி கட்சித் தலைவர் மனைவி மீதே காவல்துறை தாக்குதல்” : இதுதான் சட்டம் ஒழுங்கா? திமுக அரசை விளாசிய எடப்பாடி

“திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் தமிழகத்தில் இன்று நீடிக்கிறது” என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
Edappadi Palaniswami strongly criticized situation in TN today, saying wife of DMK alliance party leader
Edappadi Palaniswami strongly criticized situation in TN today, saying wife of DMK alliance party leader https://x.com/EPSTamilNadu/media
1 min read

மாற்றுத்திறனாளிகள் கைது

Opposition leader Edappadi Palaniswami has strongly criticized the situation in Tamil Nadu today, saying that the wife of the DMK alliance party leader is being attacked by the police : சென்னையில் உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

அலைகழித்த காவல்துறை

சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சிபிஎம் தலைவர் மனைவி மீதும் தாக்குதல்

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஐஎம் மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , முதல்வர் ஸ்டாலின் அரசு அனைத்து விதமான ‘கோரிக்கைக் குரல்களை’ ஒடுக்கப் நினைப்பதுதான் திமுகவினுடைய பாசிஸ மனோபாவத்துக்கான சான்று.

பாசிச திமுக அரசுக்கு கண்டனம்

ஜனநாயக விரோத, பாசிஸப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அடக்குமுறையை கைவிடுக

மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in