

அதிமுகவின் சி. விஜயபாஸ்கர்
அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தார். எடப்பாடி ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, கொரோனா கால சிக்கல்களை திறமையாக சமாளித்தார்.
விராலிமலை எம்எல்ஏ
விராலிமலை சட்டமன்ற தொகுதி இவரது கோட்டை என்றே கூறப்படும். சட்டமன்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றாலும், அதிமுகவின் தோல்வி பிரச்னைகளுக்கு வழிவகுத்தது.
எடப்பாடியுடன் விஜயபாஸ்கர் மோதல்
தவெக அரசுக்கு விஜயபாஸ்கர் உட்பட 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தர, அவர்களின் மாவட்ட பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு, தகுதி நீக்கம் இல்லை என்றாலும், மோதல் போக்கு தொடர்ந்தது.
அதிமுகவில் இருந்து விலகல்
இந்தநிலையில், சி. விஜயபாஸ்கர் தனது எம். எல். ஏ பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகியவற்றை ராஜினாமா செய்து விட்டார். சபநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
விராலிமலை தொகுதி காலி
இதையடுத்து, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் ஏற்கனவே காலியாக இருக்கும் 5 தொகுதிகளோடு சேர்த்து 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
எங்கு செல்கிறார் சி. விஜயபாஸ்கர்
இந்தநிலையில், சி. விஜயபாஸ்கர் எந்த கட்சியில் இணையப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு தவெக நோ சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தயங்கும் தவெக
தவெகவில் தான் இணைவார் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் இருந்தாலும், அதற்கு உரிய சமிக்ஜை தவெகவில் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுவரை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களும் விஜய் கட்சியில் தான் ஐக்கியமாகினர்.
சனிக்கிழமை தோறும் இணைப்பு விழா
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இணைப்பு விழா நடத்தும் அளவிற்கு அதிமுகவில் இருந்து பலரும் தவெக பக்கம் நகர்ந்து வருகின்றனர்.
தமிழக அரசியல் இருமுனையில் இருந்து மாறி மூன்று முனையாக மாறிவிட்டது. தவெக ஆளுங்கட்சி இடத்தை பிடிக்க, திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்தது.
நிலுவை வழக்குகள் - நோ சொல்லும் தவெக
சி. விஜயபாஸ்கர் மீதான வழக்குகளால் தமிழக வெற்றிக் கழகத்தின் தூய சக்தி என்ற பிம்பம் உடைபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, குட்கா வழக்கு, லஞ்சப் புகார், பணப்பட்டுவாடா வழக்கு, ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன.
தவெக அச்சம்?
இவ்வளவு வழக்குகள் உள்ள ஒருவரை கட்சிக்குள் இணைப்பது தூய கட்சி என்ற பிம்பத்தை உடைத்து விடும் என்று தவெக அச்சப்படுகிறது.
திமுகவில் சி. விஜயபாஸ்கர்!
எனவே திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ரகுபதி. இவர் சீனியர். அதிமுகவில் இருந்து திமுகவற்கு வந்தவர்.
2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகான நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அதே மாவட்டத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் சி. விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
அண்ணாமலை இயக்கத்தில் விஜயபாஸ்கர்?
இதற்கிடையே அண்ணாமலை புதிதாக தொடங்கப்படும் கட்சியில் இணைவதற்கும் வாய்ப்பிருப்பதாக பேசுகின்றனர். எனவே சி. விஜயபாஸ்கர் எத்தகைய முடிவை எடுக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிதுள்ளது.
==============================