பாமகவில் முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல் : ”இனி நல்லதே நடக்கும்” அன்புமணி மகிழ்ச்சி ..!

அன்புமணியை ஆரத்தழுவி ராமதாஸ் வரவேற்ற நிலையில் தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
Father-son rift comes to an end; only good things will happen from now on, says Anbumani.
Father-son rift comes to an end; only good things will happen from now on, says Anbumani. google
1 min read

அன்புமணியை ஆரத்தழுவி தந்தை ராமதாஸ் வரவேற்பு

பாமகவின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே யாருக்கு கட்சி, சின்னம் என்ற மோதல் இருந்து வந்தது. இது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.

இதன்காரணமாக பாமக 2 ஆக பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தந்தை ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி சந்தித்தார். தந்தையின் திருமண நாளை ஒட்டி இந்த நிகழ்வு நடந்தது. மகனை ஆரத்தழுவி வரவேற்றார் ராமதாஸ்.

இருவரும் கண்ணீர் பெருக்கெடுக்க அன்பை பரிமாறிக்க ஒண்டு, தந்தை மகன் மோதல் முடிவு கட்டினர்.

இனி நல்லதே நடக்கும் : அன்புமணி தெரிவிப்பு

பாமகவில், நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இதுநாள் வரை இருந்து வந்த தந்தை மகன் மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இதுநாள் வரை, ராமதாஸ் கட்சி, அன்புமணி கட்சி என இரண்டாகப் பிரிந்திருந்த பாமக, இன்றைய சந்திப்பின்மூலம் ஒன்றிணையும் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் பகுதியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு இன்று பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் சென்று

ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்துடன் வந்து ஆசிர்வாதம் பெற்றார் அன்புமணி.

இந்த சந்திப்புக்கு பிறகு , இனி நல்லதே நடக்கும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்

மாம்பழம் சின்னம் ;அன்புமணிக்கு , நீதிமன்றம் கருத்து

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, பாமக கட்சியின் கொடி சின்னம் ஆகியவை அன்புமணிக்கு கூறியது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது

சசிகலா கூட்டணியில் போட்டியிட்ட ராமதாஸ்

இதனைத் தொடர்ந்து அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு போட்டியிட்டது இதில் நான்கு பகுதிகளில் மட்டுமே அன்புமணி தரப்பு பாமகவால் வெற்றி பெற முடிந்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ் - சசிகலா தொடங்கிய புதிய கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் வயது முப்பு காரணமாக அரசியல் பணிகளில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in