”மதுராந்தகம், தாராபுரம்-வேட்புமனு தாக்கல் தொடக்கம்” : கடுமையான போட்டியா? : யாருக்கு வெற்றி, எகிறும் எதிர்பார்ப்பு..!

தமிழ்நாட்டுல மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.
filing of nomination papers for by-elections in the Maduranthakam and Dharapuram has begun
filing of nomination papers for by-elections in the Maduranthakam and Dharapuram has begungoogle
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்துச்சு. இதுல தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மை கிடைக்கல. எனவே, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளோட ஆட்சி அமைக்க, விஜய் முதலமைச்சரானாரு.

அதிமுகவில் பிளவு - தவெகவிற்கு ஆதரவு

தேர்தல் முடிவுகள் அதிமுகவில் பூகம்பத்தை கிளப்பியது. தேர்தல் தோல்விக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. தேர்தல் தோல்விக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில ஒரு பிரிவு ஆதரவு தெரிவிச்சதால, அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சமாதான முயற்சிக்கு பிறகு, சிலர் தாய்க் கழகத்திற்கு திரும்பினாங்க.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

ஆனால், அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ,மதுராந்தகம் தாராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் பதவிய ராஜினாமா செஞ்சிட்டு, தவெகவில இணைஞ்சாங்க.

இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்

இதுல மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் அப்படின்னு தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. அக்டோபர் 9ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கு.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த விரும்பவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவிச்சது.

5 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு

5 தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு. இந்த தொகுதிகள்ல்ல தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் அப்படின்னும் நீதிமன்றத் தெரிவிச்சு இருக்கு.

வேட்புமனு தாக்கல் தொடக்கம்

இந்தநிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னிக்கு தொடங்கிடுச்சு. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றவை ஆகும்.

அதிமுக வென்ற தாராபுரம், மதுராந்தகம்

ஆளுங்கட்சியான திமுக, மக்கள் ஆதரவு நிறைந்த தவெகவின் கடும் சவாலுக்கு இடையே இந்த தொகுதிகளில் அதிமுக தனது கொடியை நாட்டியது. பின்னர் ஆளுங்கட்சியான தவெக இந்த தொகுதிகளில் தோல்வியை கண்டது.

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கௌரி சித்ரா, அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை காட்டிலும் 34 ஆயிரத்து 662 வாக்குகளை குறைவாக பெற்று மூன்றவாது இடத்தை பிடித்தார்.

மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை காட்டிலும் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 7 ஆயிரத்து 194 வாக்குகள் பின் தங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

சட்டசபையில தவெகவிற்கு இப்போது முதல்வர் விஜயோடு சேர்த்து, 106 எம்எல்ஏக்கள் இருக்காங்க. அதிமுகவிற்கு 37 உறுப்பினர்கள் இருக்காங்க.

இடைத்தேர்தலில் அதிமுக போட்டி

இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செஞ்சு இருக்கிற அதிமுக, மூன்று நாட்களுக்கு விருப்ப மனுவை வாங்குது. திமுகவும் தேர்தலில் போட்டியிடும் என்று தான் தெரிகிறது. திமுக விலகினா, தோல்வி பயம் அப்படிங்க விமர்சனம் முன்வைக்கப்படும்.

ஆளுங்கட்சிக்கு சவால்

இதுல ஆளுங்கட்சியான தவெகவிற்கு தான் சிக்கல் அதிகமாக இருக்கு.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு வெற்றியும் தவெகவிற்கு மிகமிக முக்கியம். சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை 117 என்ற மேஜிக் நம்பரை எட்டினா, யாரோட தயவும் இல்லாம, முதல்வர் விஜய் சுதந்திரமா செயல்பட முடியும்.

தவெகவில் யாருக்கு வாய்ப்பு?

இரண்டு தொகுதி வெற்றி, பிறகு நடைபெறும் 5 தொகுதி இடைதேர்தலுக்கு கை கொடுக்கும். தவெகவிற்கு பிரச்சினை என்னன்னா, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு வந்த சத்யபாமா, மரகதம் குமரவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கிறதா அல்லது தங்கள் கட்சிது வேட்பாளர்களை நிறுத்துவதா என்பது தான்.

இரண்டு தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைஞ்சவங்க, இந்த முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு போக விரும்புவாங்க. அவங்களோட நிலைமையையும் பரிசீலிக்க வேண்டிய நிலையில, தவெக இருக்கு. அதேசமயம், தங்களை நம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்ச அதிமுகவினரையும் கைவிட முடியாது.

கோதாவில் இறங்கும் அதிமுக

அதிமுக இந்த தேர்தல்ல போட்டியிட காரணம் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள். இடைத்தேர்தல் தவெகவால திணிக்கப்பட்டது அப்படிங்கற குற்றச்சாட்டை வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல்ல வெற்றி கிடைச்சா, அது அவரோட செல்வாக்கை உயர்த்தும்.

எனவே, 2 தொகுதி இடைத்தேர்தல் மும்முனை போட்டியா, விறுவிறுப்பாக இருக்கும் அப்படிங்கறது தெரியும்.

தவெக அரசு மீதான மக்கள் மதிப்பீடு

தவெக அரசின் முதல் நான்கு மாத ஆட்சிக்கு மக்கள் கொடுக்கிற சர்டிபிகேட்டாக இடைத்தேர்தல் இருக்க போவுது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, வெளிப்படையான நிர்வாகம், தேர்தல் வாக்குறுதிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது.

மும்முனை போட்டியா?

திமுகவும் களமிறங்கினா, மும்முனை போட்டியில், வெற்றி ஈசி என்கின்றனர் தவெகவினர். எனவே, நடைபெற இருக்கிற இரண்டு தொகுதி இடைத்தேர்தல், யாரை கைதூக்கி விடப் போகுது, யாருக்கு தோல்விய பரிசா கொடுக்க போகுது அப்படிங்கற எதிர்பார்ப்பு,தமிழக மக்களிடையே உருவாக்கி இருக்கிறது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in