எடப்பாடி பழனிசாமி, வேட்புமனு தாக்கல்
Edappadi Palanisamy Files Nomination for 2026 Election : அதிமுக பொதுச்செயலாளரும் ,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
எடப்பாடியில் 8வது முறையாக களம் காணும் எடப்பாடி
நான்கு முனைப்போட்டியை சந்திக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில், 8வது முறையாக சேலம் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார் எடப்பாடி பழனிசாமி , தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர்,
இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அதன்படி எடப்பாடி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் தனது மனுவினை தாக்கல் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக போட்டியிடுகிறார். தமிளக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பளராக்களை ஆதரித்து
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ,மோடி ஆதரித்து தேர்தல் பார்ப்புரையை மேற்கொண்டார்
முதன்முதலாக தேர்தலை எதிர்கொள்ளும் பிரேமலதா
முதன்முதலாக தேர்தலை எதிர்கொள்ளும் தேமுதிக பொதுச்செயலாளர் ,பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்து ,மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
வேட்புமனு தாக்கல் செய்த பிரேமலதா
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் , கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.
விருத்தாசலத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தின் தனது மனுவினை சமர்பித்தார் பிரேமலதா விஜயகாந்த். முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் பிரேமலதா. இதற்கு முன்பு இந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.