தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்கள் : வேட்புமனு தாக்கல் தொடக்கம் : DMK, ADMK கூட்டணி கட்சிகள் நெருக்கடி

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.
Filing of nominations for the 6 vacant Rajya Sabha seats in Tamil Nadu has begun
Filing of nominations for the 6 vacant Rajya Sabha seats in Tamil Nadu has begungoogle
1 min read

ராஜ்யசபா - 37 இடங்கள் காலியாகின்றன

Filing of nominations for the 6 vacant Rajya Sabha seats in Tamil Nadu has begun : தமிழகம் உள்பட நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் காலியாகின்றன. தமிழ்நாட்டில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்பி பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழகத்தில் ஆறு சீட்கள்

அதன்படி, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யலாம்.

மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்

திமுக 4 சீட்கள், அதிமுக 2 சீட்கள்

தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 4 எம்பிக்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். அப்படியின்றி போட்டி என்று வந்தால், எம்எல்ஏக்கள் வாக்களித்து, தேர்வு செய்வார்கள்.

ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள்

திமுக, அதிமுக சார்பில் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இருக்கும் கட்சிகள் ராஜய்சபா சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன. திமுக தனுக்கு 2 இடங்களை வைத்துக் கொண்டு, மற்ற இரண்டு இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக சீட் கேட்பதால், யாருக்கு கொடுப்பது, யாரை தவிர்ப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவுக்கு 2 இடங்கள் மட்டுமே இருந்தால், பாமக, தமாகா சீட் தேவை என்று கேட்கின்றன. எனவே, அந்தக் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in