”மதுராந்தகம் 27 பேர், தாராபுரத்தில் 22 பேர் போட்டி : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு : அக்.6ம் தேதி வாக்குப்பதிவு!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
final list of candidates released for the two constituencies by-elections are to be held
final list of candidates released for the two constituencies by-elections are to be heldsource:thamizhalai,ai generated
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். தாராபுரத்தில் அதிமுகவின் சத்தியபாமாக வாகை சூடினார்.

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, இவர்கள் இரண்டு பேரும், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இருவரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

2 தொகுதிகளில் இடைதேர்தல்

இதையடுத்து இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நிறைவு பெற்றது. மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் ஏற்கப்பட்டன.

இடைத்தேர்தல் வெட்பாளர்கள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில்- மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் - சத்யபாமா போட்டியிடுகிறார்கள்,

இவர்கள் இரண்டு பேரும் அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள்

திமுக சார்பில் மதுராந்தகத்தில் -பரந்தாமன், தாராபுரத்தில் - சுகன்யா,

அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் - கணிதா சம்பத் , தாராபுரத்தில் - பானுமதி,

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகத்தில் - ஜானகி ராமன், தாராபுரத்தில் - கார்த்திகா

இடதுசாரிகள் சார்பில் மதுராந்தகத்தில் -சுகந்தி, தாராபுரத்தில் - லட்சுமணனன் உள்ளிட்டோரை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

இந்தநிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மதுராந்தங்கத்தில் 27 பேர் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் 22 பேர போட்டியிடுகிறார்கள்.

கவனம் ஈர்க்கும் தேர்தல்

5 முனைப்போட்டி உறுதியாகி இருப்பதால், சட்டமன்ற தேர்தலை போலவே இடைத்தேர்தலும் மிகவும் கவனம் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இதனால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. வாக்காளர்களை சந்தித்து தங்களது நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை கட்சியினர் எடுத்துரைத்து வருகின்றனர்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது.

விரைவில் தலைவர்கள் பிரசாரம்

முதல்வர் விஜய், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். ஸ்டாலின், உதயநிதி போன்றோரும் பிரசாரத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. இதனால், இடைத்தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க இருக்கிறது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in