ஆதிச்சநல்லூர் to அதிவேக ரயில் தடம் : தமிழகத்திற்கான அறிவிப்புகள்

Union Budget 2026-27 : மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
Finance Minister Nirmala Sitharaman, who presented the Union Budget 2026-27, made announcements for Tamil Nadu
Finance Minister Nirmala Sitharaman, who presented the Union Budget 2026-27, made announcements for Tamil Nadu
1 min read

பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள்

Union Budget 2026-27 for Tamil Nadu : மக்களவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் நலன் சார்ந்த பல திட்டங்களை அறிவித்தார்.

கனிம உற்பத்தி ரூ.7,280 கோடி ஒதுக்கீடு

அதன்படி, அரிய வகை கனிம உற்பத்திக்காக 7 ஆயிரத்து 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும்.

இதற்காக தாது வளம் மிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

அதிவேக ரயில் வழித்தடங்கள்

அடுத்ததாக சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பொதிகை மலை-மலையேற்ற திட்டம்

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

ஆதிச்சநல்லூர் - மேம்பாடு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும்.

பழவேற்காடு - பறவைகள் காட்சி மையம்

சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் பறவைகள் காட்சி மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in