

இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Finance Minister Thangam presented the Tamil Nadu government's interim budget for the financial year 2026-27 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே ஆளும் அரசு தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது.
தங்கம் தென்னரசு தாக்கல் ்
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம் :
* தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் ஸ்டாலினால் வழிநடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.
வறுமையை ஒழிக்க இறுதிப்போர்
* தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம்.
* ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
* இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழுக்கு முன்னுரிமை
* அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12ம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது.
* வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
* தமிழ் ஆசிரியர்கள், கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான பணிகளும் பத்து கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றனர்
* மகளிர் சுய உதவிக்குழுவுக்கு திமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
உணவு உற்பத்தி - புதிய சாதனை
* உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சிபெற்றுள்ளது.
* செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும்.
* செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை
* மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம்
திருக்குறள் மொழி பெயர்ப்பு
* திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் மும்முரம்
தமிழருக்கு பெருமை சேர்க்கும் அருங்காட்சியகங்கள்
* தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள்
* .உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பு
இலங்கை தமிழர் நல்வாழ்வு
* முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்களுக்கு இதுவரை 486 கோடி ரூபாய்
* டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
* மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு
* 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன.
================