மகளிர் விடியல் பயணம், உரிமைத் தொகை : பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

TN Interim Budget 2026 : மகளிர் விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் 888 ரூபாய் சேமிப்பு செய்வதாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருக்கிறார்.
Finance Minister Thangam Thennarasu has stated that women save Rs. 888 every month through the Women's Vidail Trip
Finance Minister Thangam Thennarasu has stated that women save Rs. 888 every month through the Women's Vidail Tripgoogle
2 min read

TN Interim Budget 2026 : தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் உரையாற்றினார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் :

மகளிர் உரிமைத்தொகை

* மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டம்

* இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி

* எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிப்பு

* இதன் காரணமாக தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி அடைந்தது

* மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகள் இதயம் நெகிழும் வண்ணம் ஒரே நாளில் 6,500 கோடி ரூபாய் தொகையை ஏழை மக்களின் கையில் சென்று சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின்

* 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து

* மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிப்பு

* 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன்

* 19 தோழி விடுதிகள் அமைப்பு, மகளிர் நலன் காக்கும் திட்டங்களை பின்பற்றும் பிற மாநிலங்கள்

* மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு

பெண் ஓதுவார்கள் - அரசின் சாதனை

* பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை

* நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர்

காலை உணவுத் திட்டம்

* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு

* 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1,889 கோடி செலவு

* 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயன்

மூத்த குடிமக்களுக்கு அன்புச்சோலை

* மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள்

* திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய அரசு மானியம்

* தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்

* எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கைப் பாதையில் பயணிக்கும் தமிழக அரசு

* மாற்றுத் திறனாளிகள் நலனில் தனிக்கவனம்

* மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பன்மடங்கு அதிகரிப்பு

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கல்வி பயில தமிழ்நாடு அரசு முனைப்பு.

மாணவர்களுக்கு மடிக்கணினிகள்

* கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்

* 6 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது

* ஐந்து ஆண்டுகளில் 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்

* நாட்டிலேயே உயர்கல்வியை பொறுத்த வரையில் தேசிய சராசரியில் 47 சதவிகிதமாக உயர்கல்வி உள்ளது.

* உயர்கல்வி துறைக்கு 8,505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in